நடிகர் கமல்ஹாசன் கோவை தொகுதியில் வெற்றிப்பெறுவாரா? கணிப்பைக் கூறும் பரபரப்பு வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
வரும் சட்டமன்றத் தேர்தலில் 5 முனைப் போட்டி நிலவி வரும் சூழலில் முதல்முறையாக முதல்வர் வேட்பாளராக களம் இறங்கி இருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். மேலும் பாஜகவின் பி-டீம் என விமர்சிக்கப்பட்ட இவர் உங்கள் கணிப்பு தவறு எனக் கூறி நேரடியாக பாஜகவை எதிர்த்து கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இவரது முடிவிற்கு மக்கள் நீதி மய்யத்தின் இளைஞர்கள் பலரும் பெருத்த வரவேற்பு அளித்து தற்போது தேர்தலில் மும்மரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை எதிர்த்து நிற்கும் கமல்ஹாசன் அத்தொகுதியில் வெற்றிப் பெறுவரா? மேலும் 40 தொகுதி நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சிக்கும் 40 தொகுதி இந்திய ஜனநாயகக் கட்சிக்கு ஒதுக்கி இருக்கும் மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து தமிழகம் முழுவதும் எத்தனை தொகுதியில் வெற்றிபெறும்?, அதோடு எத்தனை சதவீதம் ஓட்டுகளை வெல்லும் என்ற எதிர்ப்பாப்பும் இருந்து வருகிறது.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் வரும் சட்டமன்றத் தேர்தலில் என்ன சாதிக்கப் போகிறது? மக்களுடைய ஆதரவு எந்த அளவிற்கு நடிகர் கமல்ஹாசனிற்கு இருக்கிறது? அதோடு பிராமணர்களின் ஆதரவு நடிகர் கமல்ஹாசனிற்கு இருந்து வருகிறது என விமர்சிக்கப்படும் நிலையில் அந்தக் கருத்துக் கணிப்பை எப்படி எடுத்துக் கொள்வது? என்பது போன்ற பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து பிரத்யேக நேர்காணல் அளித்து உள்ளார் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி அவர்கள். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் அதிக கவனம் பெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments