தமிழகத்தின் 3 ஆவது பெரிய தலைவராக சீமானை கருத முடியுமா? பரபரப்பு வீடியோ!
- IndiaGlitz, [Tuesday,May 04 2021]
நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிப்பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைக்க இருக்கிறது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை 5 முனை போட்டி நிலவியது. இந்தப் போட்டியில் கடந்த முறை பெற்ற வாக்குகளைவிட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு சீமான் சற்று கணிசமான வாக்குகளைப் பெற்று தமிழகத்தின் 3 ஆவது கட்சியாக உருவெடுத்து இருக்கிறார். அந்த வகையில் முன்பு இருந்ததைவிட சீமான் தமிழகம் முழுவதும் 3% அதிகமான வாக்குகளைப் பெற்று தற்போதைய தேர்தலில் 6.85% வாக்குகளை குவித்து இருக்கிறார்.
இந்த வளர்ச்சியை எப்படி புரிந்து கொள்வது? தமிழகத்தின் 3 ஆவது அரசியல் தலைவராக திரு சீமான் வளர்ந்து விட்டாரா? என்பது போன்ற உற்சாகமான கேள்விகள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வைக்கப்பட்டு வருகின்றன. காரணம் சீமான் தொடர்ந்து ஈழத் தமிழர் விடுதலையை முன்வைத்து பொய் பேசுகிறார், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டிய ஒரு நபர் இன்று வரையிலும் கைது செய்யப்படாமல் காப்பாற்றப் படுகிறார், இதன் பின்னணியில் பாஜகவின் ஆதரவு தொடர்ந்து சீமானுக்கு இருந்து வருகிறது.
அதோடு சீமான் திராவிடக் கட்சிகளின் எதிர்ப்பாளன் எனச் சொல்லிக்கொண்டு திமுகவை மட்டுமே எதிர்த்து வருகிறார், அவர் அதிமுகவை சட்டை செய்து கொள்வது இல்லை. அதோடு தேசிய கட்சிகளைப் பற்றிப் பேசும்போது ஈழத் தமிழர் படுகொலைக்கு ஆயுதங்களை சப்ளை செய்த கட்சி என காங்கிரஸை மட்டுமே தொடர்ந்து சாடி வருகிறார், அவர் பாஜகவை குறித்துப் பேசும்போது வெறுமனே வெற்று வார்த்தைகளைப் போட்டு பேசபவராக மட்டுமே இருக்கிறார்.
இத்தகைய நிலைமை வைத்துப் பார்க்கும்போது சீமான மறைமுகமாக பாஜகவிற்கு ஆதரவு தரக்கூடிய ஒரு நபர் என்பது போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன்வைக்கப் படுகின்றன. இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு சீமான் தொடர்ந்து விளக்கம் அளித்து வந்தாலும் அந்த விளக்கத்தை பலரும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லாத சூழலில் தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தின 3 ஆவது பெரிய கட்சியாக வளர்ந்து இருக்கிறார்.
இந்த அடிப்படையில் சீமான் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையிலேயே தேவையற்றவையா? சீமான் தமிழ் தேசியம் பேசக்கூடிய நபராக, தமிழகத்தின் அடுத்தக் கட்ட வளர்ச்சிக்கு உதவி செய்பவராக தமிழக மக்கள் அவரை ஏற்றுக்கொண்டு இருக்கிறார்களா? என்பது போன்ற பல்வேறு கேள்விகளை முன்வைத்து மூத்த பத்திரிக்கையாளர் ரவீந்திரன் துரைசாமி அவர்கள் பிரத்யேக நேர்காணல் அளித்து உள்ளார். அந்த நேர்காணல் தற்போது சமூக வலைத்தளங்களில் தனிக் கவனம் பெற்று இருப்பதும் குறிப்பிடத்தக்கது.