தோல்வியை அடுத்து நடிகர் கமலின் அடுத்த கட்டம்? விளக்கும் விமர்சன வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுப்பார் எனக் கருதப்பட்ட நடிகர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு தற்போது தோல்வியைத் தழுவி இருக்கிறார். இதனால் மக்கள் நீதி மய்யம் அடுத்து என்ன செய்யப் போகிறது எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். காரணம் நடிகர் கமலைத் தவிர மூத்த அரசியல் பிரபலங்கள் யாரும் அந்தக் கட்சியில் கிடையாது.
அதோடு கடைசி நேரத்தில் சமத்துவ மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 40 இடங்களிலும் டெபாசிட் காலியாகி இருக்கிறது. அதோடு மக்கள் நீதி மய்யமும் போட்டியிட்ட 180 தொகுதிகளில் 178 இடங்களுக்கு டெபாசிட்டை இழந்து இருக்கிறது. இதனால் வெறும் 2.45% வாக்கு வங்கியைக் கொண்டு இருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடர்ந்து அரசியலில் நீடிக்குமா? அல்லது வேறு நிலைப்பாட்டை எடுக்குமா? என்ற சந்தேகத்தை பலரும் எழுப்பி வருகின்றனர்.
இதுபோன்ற கேள்விகளுக்கு பதில் அளித்து பிரத்யேக நேர்காணல் வழங்கியுள்ளார் மூத்தப் பத்திரிக்கையாளர் திரு ரவீந்திரன் துரைசாமி. தமிழகத்தில் திமுக கூட்டணி நாளை பொறுப்பேற்க உள்ள நிலையில் 3 ஆவது பெரிய கட்சியைக் குறித்தும் மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் 3 ஆவது பெரிய கட்சி உருவாவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? அல்லது குறைந்த வாக்கு எண்ணிக்கைக்கு மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகள் தள்ளப்பட்டதற்கு என்ன காரணம் என்பது போன்ற கேள்விகள் இயல்பாகவே எழுகின்றன. இந்த கேள்விகளுக்கு ரவீந்திரன் துரைசாமி அவர்கள் பதில் அளித்து உள்ளார். அந்த வகையில் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் தனிக்கவனம் பெற்றிருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout