பாண்டி பஜார்ல பிளவுஸ் தைக்க வந்தவங்க இவங்க.. பிக்பாஸ் 8 போட்டியாளர் குறித்து ரவீந்தர்

  • IndiaGlitz, [Thursday,October 24 2024]

பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியின் போட்டியாளராக இருந்து இரண்டாவது வாரமே வெளியேற்றப்பட்ட ரவீந்தர் சமீபத்தில் அளித்த பேட்டியில் பிக் பாஸ் 8 போட்டியாளர்களில் ஒருவர் சென்னைக்கு பாண்டி பஜாரில் பிளவுஸ் தைக்க வந்தவர் என்று கூறி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரவீந்தர் கூறிய அந்த போட்டியாளர் தர்ஷா தான். அவர் தமிழ்நாட்டிற்கு பிளவுஸ் தைக்க தான் வந்தார் என்றும், பெங்களூரில் டீச்சராக வேலை செய்து கொண்டிருந்த அவர், பாண்டி பஜாரில் ஜாக்கெட் தைக்கிறதுக்காக வந்தபோது, நீங்கள் சினிமாவுக்கு செல்லலாமே என்று சிலர் ஆசை வார்த்தை கூறியதாகவும், அதன் பின்னர்தான் அவர் சினிமாவுக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை, தர்ஷா பேச வேண்டிய இடத்தில் பேச மாட்டார், பேசக்கூடாத இடத்தில் பேசுவார். கேமரா இல்லாத இடத்தில், கேமரா இருக்கிறது என நினைத்து தனியாக பெர்ஃபார்ம் பண்ணிக்கிட்டு இருப்பார். அவர் போடுகிற சண்டை பாதி பொய்யாக தான் இருக்கும் என்று கூறினார்.

மேலும் வைல்ட் கார்டு என்ட்ரி வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்கு செல்வேன் என்றும் தற்போது எனக்கு உடல்நிலை நன்றாக இருக்கிறது என்றும் கண்டிப்பாக நான் மீண்டும் சென்று நீங்கள் நினைப்பதை கொடுப்பேன் என்றும் தெரிவித்தார்

More News

ஒரே படத்தில் இருந்து விலகிய சமந்தா, ஸ்ருதிஹாசன்.. இருவரும் விலகியதற்கு ஒரே காரணம்..!

'சென்னை ஸ்டோரி' என்ற திரைப்படத்தில் முதலில் சமந்தா நடிக்க இருந்த நிலையில் அவர் திடீரென அந்த படத்தில் இருந்து விலகினார். அதன் பின்னர் சமந்தா நடிக்க இருந்த கேரக்டரில் ஸ்ருதிஹாசன்

'குட் பேட் அக்லி' ஸ்பெயின் படப்பிடிப்பில் இருந்த த்ரிஷா.. திடீரென சென்னை திரும்பியது ஏன்?

அஜித் நடிக்கும் 'குட் பேட் அக்லி' படத்தின் படப்பிடிப்பு தற்போது ஸ்பெயின் நாட்டில் நடந்து வரும் நிலையில், இந்த படப்பிடிப்பில் த்ரிஷா கலந்து கொண்டிருந்த நிலையில், திடீரென அவர் சென்னை திரும்பி விட்டதாக

இந்த வார டிஆர்பி ரேட்டிங்.. முதல் 6 இடங்களில் சன் டிவி சீரியல்கள் தான்..!

தமிழ் தொலைக்காட்சிகளை பொருத்தவரை சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் ஆகியவற்றில் சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில், சன் டிவி மற்றும் விஜய் டிவிக்கு இடையே தான் கடும் போட்டி டிஆர்பியில் நிலவி வருகிறது

புஷ்பா 2 ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்.. இன்னொரு ஆச்சரியமான தகவல்..!

அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா 2' திரைப்படம் டிசம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாகவும்,

அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில், டாப் 4 இல் இடம் பிடித்த போகுமிடம் வெகு தூரமில்லை திரைப்படம்

Shark 9 pictures சார்பில் சிவா கிலாரி தயாரிப்பில், நடிகர் விமல் மற்றும் கருணாஸ் நடிப்பில், அறிமுக இயக்குநர் மைக்கேல் K ராஜா இயக்கத்தில், மாறுபட்ட களத்தில்,