ரவீந்தர் - மகாலட்சுமி காதல் தம்பதி: ஹனிமூன் எங்கே சென்றார்கள் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் மற்றும் விஜே மகாலட்சுமி ஆகிய இருவரும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார்கள் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே.
கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜே மகாலட்சுமியை தயாரிப்பாளர் ரவீந்தர் காதலித்து வந்ததாகவும் இதனை அடுத்து தற்போது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. திருப்பதியில் நடந்த இந்த திருமணத்திற்கு பின்னர் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் இந்த காதல் தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் திருமணம் முடிந்த நிலையில் வெளிநாடுகளுக்கு ஹனிமூன் செல்லாமல் சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் இந்த காதல் தம்பதிகள் ஹனிமூன் கொண்டாடி வருகின்றனர். மகாபலிபுரத்தில் உள்ள ரெசார்ட்டில் இருக்கும் புகைப்படங்களை விஜே மகாலட்சுமி பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன., இருப்பினும் ஹனிமூன் சென்ற இடத்தில் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்யாமல் தனியாக இருக்கும் புகைப்படத்தை மகாலட்சுமி பதிவு செய்தது ஏன் என்ற கேள்வியையும் ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் எழுப்பி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com