ரவீந்தரை அடிக்க பாய்ந்த ரஞ்சித்.. பிக்பாஸ் வீட்டில் ரணகளம்..!

  • IndiaGlitz, [Wednesday,October 09 2024]

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இன்றைய மூன்றாவது நாளில் ரவீந்தரை ரஞ்சித் அடிக்க ஆவேசமாக பாய்ந்த காட்சிகள் ப்ரோமோவில் வெளியானதை அடுத்து பிக் பாஸ் வீட்டில் ஒரு ரணகளம் நடக்கிறது என்பது மட்டும் தெரிய வந்துள்ளது.

இதுவரை நடந்த பிக் பாஸ் சீசன்களில், இந்த சீசனில் தான் அதிக சண்டை போடுவார்கள் என்ற சாதனை ஏற்படும் என்று கூறப்பட்டு வருகிறது. முதல் நாளே போட்டியாளர்களுக்குள் கருத்து வேறுபாடு மற்றும் சண்டை ஏற்பட்ட நிலையில், இன்று நடந்த ஒரு வாக்குவாதத்தில் ரவீந்தர் மற்றும் ரஞ்சித் ஆகிய இருவரும் மோதிக்கொள்கின்றனர்.

ஒரு கட்டத்தில் கையேடுறா? என்று ரஞ்சித் சொல்ல, ரவீந்தர் ஆவேசமாகி என்னடா செய்து விடுவாய்? என்று கேட்கிறார். இதை அடுத்து ரவீந்தரை அடிப்பதற்காக ரஞ்சித் பாய, சக போட்டியாளர்கள் அவரை கஷ்டப்பட்டு பிடிக்கின்றனர். இந்த களபேரத்தில், சண்டையை தடுக்க வந்த அருண் கீழே விழுந்துவிட்ட நிலையில், அவரை யாருமே கவனித்தது போல் தெரியவில்லை.

ரவீந்தரை ஜாக்குலினும் மற்ற போட்டியாளர்களும் ரஞ்சித்தையும் சமாதானப்படுத்தி வருகின்றனர். இந்த சண்டைக்கு முழுமையான காரணம் என்ன என்பது இன்றைய எபிசோடில் தான் தெரியவரும் என்றாலும், இந்த சண்டை பிக் பாஸ் வீட்டில் ஒரு ரணக்ளத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது மட்டும் இந்த ப்ரோமோ வீடியோவில் இருந்து தெரியவந்துள்ளது.

More News

தனுஷுடன் மீண்டும் ஒரு திரைப்படம்.. தேசிய விருது பெற்ற பின் உறுதி செய்த நித்யா மேனன்..!

தனுஷ் நடித்த 'திருச்சிற்றம்பலம்' என்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நித்யா மேனனுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று அந்த விருதை குடியரசு

கமல்ஹாசன் - அன்பறிவ் படத்தின் முக்கிய அறிவிப்பு.. வேற லெவல் வீடியோ ரிலீஸ்..!

உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'தக்லைப்' என்ற படத்தில் நடித்திருக்கும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தகவல்கள் விரைவில்

டின்னு சொல்லாதேன்னா சொல்லாதே.. ஆர்ஜே விஷாலிடம் ஆவேசமான பவித்ரா..

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு வாரம் அல்லது இரண்டு வாரம் கழித்து விறுவிறுப்பாகும் என்ற நிலையில் இந்த சீசன் முதல் நாளிலிருந்து விறுவிறுப்பாகி உள்ளது என்பதும்

மாரி செல்வராஜின் 'வாழை'.. ஹாட் ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகும் தேதி அறிவிப்பு..!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வரும் அக்டோபர் 11 முதல், இயக்குனர் மாரி செல்வராஜின் சூப்பர் ஹிட் படமான “வாழை” திரைப்படத்தினை ஸ்ட்ரீம் செய்கிறது !!

எங்க வீட்டு கொலு : பிரபல செய்தி வாசிப்பாளர் ரத்னா வீட்டு கொலு Tour!

பிரபலமான செய்தி வாசிப்பாளர் ரத்னா அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில், நவராத்திரி கொலுவைப் பற்றி ஆழமாகப் பேசியுள்ளார்.