இந்த நாட்டோட பிரதான பிரச்சனையே எங்க கல்யாணம் தான்.. திருமண நாளில் ரவீந்தரின் நெகிழ்ச்சிப்பதிவு..!.
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், கடந்த ஆண்டு இதே நாளில் சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல யூடியூப் சேனல்களில் இந்த திருமணம் குறித்த சர்ச்சைக்குரிய செய்திகள் வெளியாகின.
பணத்துக்காக தான் இந்த திருமணம் நடந்ததாகவும் இன்னும் ஒரு சில வாரங்களில் இருவரும் தெரிந்து விடுவார்கள் என்றும் பலர் செய்தி வெளியிட்டனர். ஆனால் இன்று ரவீந்தர் - மகாலட்சுமி தம்பதியினர் மிகவும் சந்தோஷமாக தங்களது முதலாவது திருமண நாளை கொண்டாடி வருகின்றனர்.
இது குறித்து ரவீந்திர் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு நீண்ட பதிவை செய்து உள்ளார். அதில், ‘ஒரு வருடம் மிகவும் வேகமாக போய்விட்டது. போன வருடம் இந்த நாட்டோட பிரதான பிரச்சனையை எங்கள் கல்யாணம்தான், போற இடமெல்லாம் எங்களை ஒரு மாதிரியாக மாறியாக பார்த்தார்கள். இது எப்படி என்று ஆராய்ச்சி செய்தனர்.
பணத்துக்காக தான் நாங்கள் சேர்ந்ததாக கூறினார்கள். ஆனால் எல்லா விமர்சனங்களையும் முறியடித்து நாங்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். முதலில் கூட நான் என் மனைவியை ஒரு மாதிரியாக நினைத்தேன். சீரியல் நடிகை என்றால் வேலைக்காரி எல்லாம் வைத்து மிகவும் ஆடம்பரமாக இருப்பார் என்று நினைத்தேன் ஆனால் காலையில் எழுந்து கோலம் போடுவது, சூப்பரான காபி மற்றும் சுமாரான சமையல் செய்வது எல்லாமே பார்த்து அசந்து விட்டேன். சமையல் கொஞ்சம் சுமாராக இருந்தாலும் போகப் போக சரியாகிவிடும்.
எங்கள் லவ் உங்க வீட்டு லவ், எங்க வீட்டு லவ் அல்ல, முரட்டு லவ். அவர் மீது நானும் என் மீது அவரும் மிகுந்த அன்பு வைத்திருக்கின்றோம், விமர்சனம் செய்பவர்களை பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை, திருமண நாள் வாழ்த்துக்கள்’ என்று பதிவு செய்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com