இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம்… மல்யுத்தப் பிரிவில் சாதனை படைத்த வீரர்!
- IndiaGlitz, [Thursday,August 05 2021] Sports News
ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்தப் போட்டியில் கலந்து கொண்ட இந்திய வீரர் ரவி குமார் தாஹியா அரையிறுதியில் வென்று இறுதிப்போட்டிக்குத் தகுதிப் பெற்றிருந்தார். தங்கப் பதக்கத்திற்கான இறுதிச் சுற்றில் அவர் வாய்பை நழுவவிட்டு தற்போது வெள்ளிப் பதக்கத்தை தக்க வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தியாவிற்கு மற்றொரு பதக்கம் உறுதிச் செய்யப்பட்டு இருக்கிறது.
ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் கலந்து கொண்ட ரவிக்குமார் முதலில் கொலம்பியாவை சேர்ந்த ஆஸ்கர் உர்பனாவை 13-2 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தினார். அடுத்து 57 கிலோ எடைப்பிரிவில் பல்கேரியாவைச் சேர்ந்த ஜார்ஜி வாங்கெலோவை 14-4 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தினார்.
இதனால் காலிறுதிக்கு தகுதிப்பெற்ற அவர் மீண்டும் 57 கிலோ எடைக்கான ப்ரீ ஸ்டைலில் கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த நூரிஸ்லாம் சயனே என்பவரை தோற்கடித்தார். இதையடுத்து அவர் இறுதிச் சுற்றுக்கு தகுதிப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. தங்கப்பதக்கத்தை பெறுவதற்கான இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. அப்போட்டியில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டதால் தற்போது ரவிக்குமார் தாஹியாவிற்கு வெள்ளிப் பதக்கம் கிடைக்க இருக்கிறது.
இந்தியாவிற்கு ஏற்கனவே 4 பதக்கங்கள் கிடைத்துள்ள நிலையில் ரவிக்குமார் 5 ஆவதாக பதக்கம் பெற இருக்கிறார். இவரைத் தவிர 86 கிலோ எடைப்பிரிவுக்கான ப்ரீ ஸ்டைல் அரையிறுதிப்போட்டியில் இந்திய வீரர் தீபக் பூனியா 0-10 என்ற புள்ளிக்கணக்கில் அமெரிக்காவின் டேவிட் டெய்லரிடம் தோல்வி அடைந்தார். இருந்தாலும் அவர் வெண்கலப் பதக்கம் பெறுவதற்கான போட்டியில் கலந்துகொள்ள இருக்கிறார்.