தல ஃபேன்ஸ் கலக்கிட்டிங்கப்பா: ரவிச்சந்திரன் அஸ்வின்

  • IndiaGlitz, [Wednesday,February 17 2021]

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முடிவடைந்த இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது என்பதும் இந்த போட்டியில் மிகச் சிறப்பாக பந்து வீச்சு மற்றும் பேட்டிங் செய்த தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் அஜித் ரசிகர்கள் கலக்கி விட்டார்கள் என போட்டி முடிந்த பின் வீடியோ ஒன்றை அஸ்வின் வெளியிட்டுள்ளது வைரலாகி வருகிறது. நான் பந்துவீச்சில் ஈடுபட்டிருக்கும் போது திடீரென ஒருவர் வந்து ’வலிமை’ அப்டேட் என கேட்டதால், எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அதன் பிறகுதான் நான் கூகுள் செய்து பார்த்தபோது அஜித்தின் படம் ’வலிமை’ என்பது புரிந்து வந்தது. பௌலிங் போடும் போது திடீரென ’வலிமை’ அப்டேட் கேட்டால் எப்படி எனக்கு புரியும்? என்று கூறினார்

மேலும் மறுநாள் இங்கிலாந்து வீரர் மொயின் அலி தன்னிடம் வந்து ’வலிமை’ என்றால் என்ன என்று கேட்டபோது தான் அவரிடமும் அஜித் ரசிகர்கள் ’வலிமை’ அப்டேட்டை கேட்டு இருக்கிறார்கள் என்பது எனக்கு புரிந்தது. யப்பா, அஜித் ரசிகர்கள் கலக்கிட்டீங்கப்பா, மாஸ்டர் படம் தான் கிரேட் என்று நினைத்தேன், ஆனால் அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்பதில்லையே கிரேட் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

வலிமை அப்டேட்டை சம்பந்தம் இல்லாதவர்களிடம் கேட்க வேண்டாம் என அஜித் ஒரு பக்கம் அறிக்கை வெளியிட்டிருக்கும் நிலையில் வலிமை அப்டேட்டை தன்னிடம் கேட்ட அஜித் ரசிகர்களை அஸ்வின் பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

'அப்படி போடு லவ் லவ் லவ்': கீர்த்தி சுரேஷின் இன்ஸ்டா போஸ்ட் வைரல்!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் கீர்த்தி சுரேஷ். சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் 'அண்ணாத்த'

விஷாலின் 'சக்ரா' படம் குறித்து நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

விஷால் நடித்த 'சக்ரா' திரைப்படத்திற்கு ஏற்கனவே பல பிரச்சினைகள் ஏற்பட்ட நிலையில் அந்த பிரச்சனையிலிருந்து மீண்டு பிப்ரவரி 19ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இசைஞாயின் ஸ்டுடியோவை பார்த்து, ரசித்து பாராட்டிய ரஜினிகாந்த்: வைரல் புகைப்படங்கள்!

இசைஞானி இளையராஜா கடந்த பல வருடங்களாக பிரசாத் ஸ்டூடியோவில் பாடல்கள் கம்போஸ் செய்து கொண்டிருந்த நிலையில் சமீபத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பிரசாத் ஸ்டூடியோவில்

2021 க்கான புதிய தொழில் கொள்கையை வெளியிட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!

தமிழ்நாடு தொழில் கொள்ளை மற்றும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் கொள்கை 2021 ஆகியவற்றை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார்.

சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லானுக்கு மணிமண்டபம் – முதல்வர் பழனிசாமியின் அதிரடி முடிவு!

நேற்று நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அருந்ததியர் மாநாடு நடைபெற்றது. ஆதிதமிழர் முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி