2016ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர். அஸ்வினை தேர்வு செய்த ஐசிசி

  • IndiaGlitz, [Thursday,December 22 2016]

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னனி ஆல்ரவுண்ரும் தமிழகத்தை சேர்ந்தவருமான அஸ்வின் இந்த ஆண்டுக்கான ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை பெற்றுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சின் மன்னனாக விளங்கி வரும் அஸ்வின் இந்த ஆண்டு மட்டும் 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி48 விக்கெட்டுகளளை கைபற்றியதோடு 336 ரன்களையும் குவித்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளளில் அதிக விக்கெட்டுக்கள் எடுத்ததுடன் மட்டுமின்றி பேட்டிங்கிலும் ஜொலித்து வந்தார். இந்நிலையில் அவருக்கு இந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் என்ற விருது மட்டுமின்றி ஐசிசி சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என்ற விருதும் கிடைத்துள்ளது. மேலும் ஐசிசி தரவரிசையில் பவுலிங், ஆல்ரவுண்டர் ஆகிய இரண்டு பிரிவுகளில் நம்பர் ஒன் இடத்தில் அஸ்வின் உள்ளார்.

இதற்கு முன்னர் ஒரே ஆண்டில் இரண்டு விருது பெற்ற இந்திய வீரர் ராகுல் டிராவிட் மட்டுமே இருந்த நிலையில் தற்போது இந்த பெருமை அஸ்வினுக்கும் கிடைத்துள்ளது.