40 வயசுல விஜயகாந்த் மாதிரி பொளந்துகிட்டு இருக்காரு.. தோனி குறித்த தமிழக கிரிக்கெட் வீரர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
40 வயதில் விஜயகாந்த் போல தல தோனி பொளந்துகிட்டு இருக்கார் என்று தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் அஸ்வின் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
நேற்று நடைபெற்ற பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி முடிந்த முன்னர் ராஜஸ்தான் அணியில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியபோது, ‘நீங்க மட்டும் தோத்தாலும் ஜெயிச்சாலும் விசில் போடுன்னு சந்தோசமா இருக்கீங்க, ஆனா நாங்க கொஞ்சம் நல்லா விளையாடுவது உங்களுக்கு பிடிக்கலையா? என கூறினார்
மேலும் எங்கள் சிஎஸ்கே டீமை தாக்குவதற்கு நீங்கள் ரெடியா இருக்கீங்களா என கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘அதெல்லாம் ஒன்றும் இல்லை, நாமெல்லாம் அண்ணன் தம்பிகள், அண்ணன் தம்பிக்குள் சண்டை வந்தாலும் நாம் எல்லோரும் ஒன்று தான், அண்ணன் தம்பியை பிரித்து பேசாதீர்கள், என்னதான் அண்ணன் தம்பிக்குள் சண்டை வந்தாலும் நாமெல்லாம் ஒன்றுதான்’ என்று கூறினார்.
அப்போது நீங்கள் தான் பெரிய அண்ணன் என்று வர்ணனையாளர் முத்து கூற, அதெல்லாம் இல்லை, 40 வயதில் ஒருவர் டிராக்டர் ஒட்டிக்கொண்டு வந்து பாலை பொளந்து கிட்டு இருக்கிறார், அவர் ’எங்கள் அண்ணா’ விஜயகாந்த் ரேஞ்சுக்கு ஆடிக் கொண்டிருக்கிறார், அட்லீஸ்ட் நாம ஒரு பிரபுதேவா அளவுக்காவது பண்ணுவோம் என்று பண்ணிக் கொண்டிருக்கிறேன்’ என்று கூறினார். ரவிச்சந்திரன் அஸ்வினின் இந்தபேட்டியின் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com