அஸ்வினைவிட ஹர்பஜன் படு பயங்கரம்… முன்னாள் வீரரின் அதிரடி கருத்து!
- IndiaGlitz, [Thursday,March 04 2021] Sports News
ஐபிஎல் போட்டிகளில் சென்னை சிஎஸ்கே அணியில் விளையாடி வந்த ஹர்பஜன் சிங் அணி ஏலம் நடைபெறுவதற்கு முன்பே சிஎஸ்கேவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். காரணம் அவர் அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற ஐபிஎல் 2020 போட்டிகளில் கலந்து கொள்ள வில்லை. எனவே சிஎஸ்கேவில் இருந்து விலகி அடிப்படை விலையான ரூ.2 கோடி விலையுடன் ஏலத்தில் கலந்து கொண்டார். ஆனால் துருதிஷ்டவசமாக ஐபிஎல் ஏலத்தில் ஹர்பஜனை எந்த அணியும் கண்டு கொள்ளவில்லை.
இந்நிலையில் ஐபிஎல் மற்றும் சர்வதேசப் போட்டிகளில் விளையாடாத இவர் சையத் முஷ்டாக் கோப்பை போன்ற கோப்பை போட்டிகளில் விளையாடி வருகிறார். தற்போது இந்தியாவில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டித் தொடர் நடைபெற்றது வருகிறது. இத்தொடர் போட்டிகளில் இந்திய ஸ்பின் பவுலர் அஸ்வின் பெரிதும் கவனிக்கப்பட்டு வருகிறார்.
இப்படி இருக்கும் போது இங்கிலாந்து அணியின் முன்னாள் ஸ்பின் பவுலர் இயன் பெல் அஸ்வினின் பந்து வீச்சைவிட ஹர்பஜனின் பந்து வீச்சு மிக அபாரமாக இருக்கும். ஹர்பஜனின் பந்து வீச்சை எதிர்கொள்வது மிகவும் கடினம். அதை நான் நன்கு உணர்ந்து கொண்டு இருக்கிறேன் எனத் தன்னுடைய அனுபவத்தை பதிவு செய்து இருக்கிறார்.
ரன் ஆர்டர் எனும் விளையாட்டு தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயன் பெல்லிடம் இந்திய பந்து வீச்சாளர் அஸ்வினைக் குறித்து எழுப்பிய கேள்விக்கு அஸ்வின் சிறந்த சுழற்பந்து வீச்சாளராக இருந்து வருகிறார். அவரிடம் நிறைய உக்திகள் இருக்கின்றன. ஆனால் நான் ஹர்பஜனிடம் தான் அதிகச் சிரமப்பட்டேன் எனத் தெரிவித்து உள்ளார்.
இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் கடந்த 2006, 2007, 2008, 2010, 2011 ஆகிய ஆண்டுகளில் ஹர்பஜன் இந்தியாவிற்காக விளையடினார். இதனால் வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் 152 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆனால் அஸ்வின் இதுவரை 123 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். இதற்கு காரணம் அஸ்வினுக்கு வெளிநாட்டு போட்டிகளின்போது மிக குறைந்த ஓவர்களே வழங்கப்படுகின்றன. எதிர்காலத்தில் இந்த நிலைமை மாற வேண்டும் என்றும் இயன் பெல் தன்னுடைய உரையில் தெரிவித்து உள்ளார்.