அடிக்கிறதுக்கு முன்னாடி வார்னிங் கொடுக்குறது என் வழக்கம்: ஜிவி பிரகாஷ் வெளியிட்ட 'டைகர் நாகேஸ்வரராவ்' டிரைலர்..!

  • IndiaGlitz, [Tuesday,October 03 2023]

ரவிதேஜா நடிப்பில் உருவாகி உள்ள ’டைகர் நாகேஸ்வரராவ்’ என்ற திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள நிலையில் இந்த படத்தின் தமிழ் டிரைலரை நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த டிரைலர் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

இந்தியாவையே ஆட்டி படைத்த பெரும் கொள்ளைக்காரன் ஆன டைகர் நாகேஸ்வரராவ் வித்தியாசமான முறையில் கொள்ளையடிப்பது, கொள்ளையடிக்கும் முன் போலீசாருக்கு வார்னிங் கொடுப்பது என புதுமையான திருட்டுகளில் ஈடுபடும் காட்சிகள் இந்த படத்திற்காக படமாக்கப்பட்டுள்ளது.

ரவி தேஜா ஸ்டூவர்ட்புரம் கொள்ளையனாக நடித்திருக்கும் நிலையில் இந்த படத்தின் நாயகியாக நூபுர் சனான் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் அனுபவம் கெர், முரளி ஷர்மா, நாசர், ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை ‘தி காஷ்மீர் ஃஃபைல்ஸ்’ என்ற தேசிய விருது பெற்ற திரைப்படத்தை தயாரித்த அபிஷேக் அகர்வால் தயாரித்துள்ளார். இந்த படம் விஜய்யின் ’லியோ’ வெளியாகும் அடுத்த நாள் அதாவது அக்டோபர் 20ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் டிரைலர் அட்டகாசமாக இருப்பதை எடுத்து படம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

'லியோ' படம் பார்க்க இருக்கும் அஜித்.. யாருடன்? எங்கே தெரியுமா? மாஸ் தகவல்..!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 'லியோ' திரைப்படம் வரும் 19ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய

பிக்பாஸ் விதிமுறைகளை மீறிய மணி - ரவீனா.. கமல் கண்டிப்பாரா? இந்த சீசனின் ரொமான்ஸ் ஜோடி..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு காதல் ஜோடி அந்த சீசனை ரொமான்ஸுடன் கொண்டு செல்லும் என்பதை இதுவரை பார்த்துக்கிறோம். ஓவியா - ஆரவ், கவின் - லாஸ்லியா, அமீர் - பாவனி ஆகியோர்களை

கேரள கோவிலில் குஷ்புவுக்கு அளிக்கப்பட்ட மரியாதை.. 'தெய்வமே அழைத்ததாக உணர்கிறேன்' என பதிவு..!

 நடிகை குஷ்பூவுக்கு கேரளாவில் உள்ள ஒரு கோவிலில் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்ட நிலையில்  தெய்வமே தன்னை அழைத்து  மரியாதை செய்வதாக உணர்கிறேன் என குஷ்பூ உணர்ச்சி பெருக்குடன் தனது சமூக வலை

 2 பெரிய படங்கள் ரிலீஸ்... விஜய்சேதுபதி படத்தின் ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்..!

விஜய் சேதுபதி நடித்த பாலிவுட் திரைப்படமான 'மெர்ரி கிறிஸ்மஸ்' என்ற திரைப்படம் கிறிஸ்துமஸ் விருந்தாக டிசம்பர் 23ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி

'தளபதி 68' படத்தில் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க.. வெங்கட் பிரபுவிடம் வேண்டுகோள் விடுத்த காமெடி ஹீரோ..!

என்னையும் உங்கள் சகோதரர் பிரேம்ஜி போல் நினைத்துக் கொண்டு எனக்கு 'தளபதி 68' படத்தில் ஒரு வாய்ப்பு கொடுங்கள் என காமெடி நடிகராக நடித்து தற்போது ஹீரோவான