'கணிதன்' தெலுங்கு ரீமேக்கில் பிரபல ஹீரோ

  • IndiaGlitz, [Sunday,April 03 2016]

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் அதர்வா, கேதரின் தெரசா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'கணிதன்' திரைப்படம் ஊடகங்கள் மற்றும் ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படம் விரைவில் தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளதாக செய்திகள் வெளிவந்தது.
இந்நிலையில் தற்போது தெலுங்கு ரீமேக்கின் தகவல்கள் வெளிவந்துள்ளது. தமிழில் 'கணிதன்' படத்தை இயக்கிய இயக்குனர் டி.என்.சந்தோஷ் தெலுங்கிலும் இயக்கவுள்ளதாகவும் தமிழில் அதர்வா நடித்த கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் ரவிதேஜா நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
மேலும் நாயகி உள்பட மற்ற நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.