அர்ஜூன் ரெட்டி ரீமேக்கில் இணைந்த தந்தையும் மகனும்!
- IndiaGlitz, [Tuesday,February 19 2019]
சீயான் விக்ரம் மகன் துருவ் நடிப்பில் பாலா இயக்கிய அர்ஜூன் ரெட்டி ரீமேக் படமான 'வர்மா' திரைப்படம் கைவிடப்பட்ட நிலையில் தற்போது புதிய டீமுடன் இந்த படத்தை மீண்டும் உருவாக்க முயற்சிகள் நடந்து வருகிறது.
இந்த படத்தின் ஹீரோவாக மீண்டும் துருவ் நடிக்க அவருக்கு ஜோடியாக இந்தி நடிகை பனிதா சந்தூ நடிக்கவுள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக ரவி. கே.சந்திரன் தற்போது இணைந்துள்ளார். இந்த தகவலை படக்குழுவினர் சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளனர். மேலும் சூர்யா நடித்த '7ஆம் அறிவு' படத்திற்கு பின் மீண்டும் ஒரு தமிழ்ப்படத்திற்கு இவர் ஒளிப்பதிவு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
அர்ஜூன் ரெட்டி படத்தின் இந்தி ரீமேக்கில் ரவி கே.சந்திரனின் மகன் சந்தான கிருஷ்ணா ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். எனவே அர்ஜூன் ரெட்டி தமிழ் ரீமேக்கில் தந்தையும் இந்தி ரீமேக்கில் மகனும் ஒளிப்பதிவாளர்களாக பணிபுரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது