சிறகடிக்க ஆசை: வீட்டிற்குள் வந்த ஸ்ருதி .. அண்ணாமலை வீட்டில் மீண்டும் பிரச்சனை கிளம்புமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ என்ற சீரியல் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் திடீர் திருப்பமாக ரவி மற்றும் ஸ்ருதி தற்போது அண்ணாமலையின் வீட்டுக்குள் வந்துள்ளனர். விஜயா இருவருக்கும் சாந்தி முகூர்த்தம் ஏற்பாடு செய்ய அனைவரிடமும் ஆசீர்வாதம் வாங்க வேண்டும் என்று அண்ணாமலை சொல்கிறார்.
ஆனால் தன்னுடைய அறையை காலி செய்ய சொன்னதால் கோபித்துக் கொண்டு முத்து மொட்டை மாடியில் படுத்திருக்கும் நிலையில் ஆசீர்வாதம் செய்ய வரமாட்டேன் என்கிறார். அவரை மீனா சமாதானப்படுத்தி அழைத்து வந்த நிலையில் அப்பாவிற்காக வேண்டா வெறுப்பாக ரவி ஸ்ருதிக்கு முத்து ஆசீர்வாதம் செய்கிறார்.
இதனை அடுத்து மூன்று மகன்கள் மற்றும் மருமகள்களுடன் வீடு நிறைந்து இருக்கிறது என்றும் இப்போது போல் எப்போதும் அனைவரும் ஒற்றுமையாக சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றும் அண்ணாமலை அறிவுரை கூறுகிறார்
ஸ்ருதியின் துடுக்குத்தனமான பேச்சால் அண்ணாமலை மற்றும் விஜயா அதிருப்தி அடைந்தாலும் அவர் வளர்ந்த விதத்தை நினைத்து பொறுத்துக் கொள்கிறார்கள். இந்த நிலையில் ஸ்ருதி வரவால் அண்ணாமலை வீட்டில் பிரச்சனை வருமா? ஏற்கனவே மீனாவையும் முத்துவையும் பிரித்து, மீனாவுக்கு விவாகரத்து பெற்று தர வேண்டும் என்று ஸ்ருதி கூறிய நிலையில் அவர்கள் இருவரையும் பிரிக்க முயற்சி செய்வாரா? ரோகிணியின் வண்டவாளங்கள் எல்லாம் தண்டவாளம் ஏறுமா? மனோஜ் வேலையில்லாமல் ஏமாற்றி கொண்டிருப்பது இருப்பது வெட்ட வெளிச்சமாகுமா? என்பது போன்ற திருப்பங்கள் இனி அடுத்தடுத்து வரும் எபிசோடுகளில் எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com