பிகே-சுனில்: யார் சிறந்த ராஜதந்திரி? அரசியல் களத்தை அலசும் பிரத்யேக வீடியோ!
- IndiaGlitz, [Saturday,February 06 2021]
அந்த காலம் தொட்டு இந்த காலம் வரை அரசியல் களத்தில் ஆலோசனைக் கூறும் சாணாக்கியர்களுக்கு எப்போதும் மவுசு அதிகம். அந்த வகையில் வரும் தமிழகச் சட்டப்பேரவை தேர்தல் களத்தில் திமுக-அதிமுக எனும் இரண்டு பெரிய எதிர் அணிகளுக்கும், இரண்டு பெரிய சாணாக்கியர்கர்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனர். அதில் ஒருவர் பிரஷாந்த் கிஷோர். வடக்கில் பல மாநில தேர்தல் முடிவுகளைத் தீர்மானித்த இவர் முதல் முறையாக தமிழகத்தில் கால்பதித்து திமுகவிற்கு ஆலோசனை வழங்கி வருகிறார்.
அதேநேரத்தில் சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிற்காக பாடுபட்டு 39 க்கு 38 இடங்களில் வெற்றிப்பெற செய்த சுனில் தற்போது அதிமுகவிற்கு ஆதரவாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இரு பெரும் சாணாக்கியர்களின் வியூகமும் எப்படி இருக்கும்? இவர்களின் வேலைப்பாடுகள் என்ன தன்மையைக் கொண்டு இருக்கும் என்பதைக் குறித்து மூத்த அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி நமக்கு பிரத்யேக பேட்டி அளித்து இருக்கிறார்.
அவர் அளித்து உள்ள இந்த பேட்டியில் சுனில் அமைத்துக் கொடுத்த வெற்றிப் பாதையில்தான் தற்போது பிகே செயல்படுகிறார். ஆனால் சுனில் புதிய வெற்றிக்காக ஏற்கனவே தான் கையாண்ட உக்திகளோடு களத்தில் குதித்து இருக்கிறார். இதனால் இது பெரும் சாணாக்கியர்களுக்கும் இடையே போட்டி கடுமையாகத்தான் இருக்கும். பிகே தனிப்பட்ட உக்தியை கையாளும் நபர்.
ஆனால் சுனில் ஏற்கனவே தமிழக அரசியல் களத்தில் பாடம் படித்தவர் என்றும் அவர்களின் உக்தி தேர்தலில் எப்படி பயன்படும் என்பது குறித்தும் நமக்கு பிரத்யேக பேட்டி அளித்து இருக்கிறார். தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்து இருக்கும் நிலையில் தற்போது இந்த வீடியோ கடும் வைரலாகி வருகிறது.