மாஸ்டர், ஈஸ்வரன், பூமி: பொங்கலுக்கு வரும் 3 படத்திலும் பணிபுரிந்தவர் இவர்தான்!

வரும் பொங்கல் திருநாளில் தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ மற்றும் சிம்பு நடித்த ’ஈஸ்வரன்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பதும் இந்த படங்களுக்கான புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே

அதே நேரத்தில் பொங்கல் தினத்தில் ஜெயம் ரவியின் ’பூமி’ திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் டிரைலர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பொங்கல் தினத்தில் வெளியாகும் ’மாஸ்டர்’ ’ஈஸ்வரன்’ மற்றும் ’பூமி’ ஆகிய மூன்று படங்களிலும் பணிபுரிந்த கலைஞர் ஒருவர் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. பிரபல டப்பிங் கலைஞராக ரவீனா ரவி, ’மாஸ்டர்’ படத்தின் நாயகியான மாளவிகா மோகனன், ’ஈஸ்வரன்’ மற்றும் ’பூமி’ திரைப்படங்களின் நாயகியான நிதி அகர்வால் ஆகிய இருவருக்கும் டப்பிங் கொடுத்துள்ளார் என்ற தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

எனவே பொங்கல் தினத்தில் வெளியாகும் மூன்று பெரிய நடிகர்களின் படங்களிலும் டப்பிங் கலைஞராக பணிபுரிந்ததை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது