நான் செய்த தவறுகளை திருத்தி கொள்கிறேன்: ரவீனாவின் முதல் பதிவில் கூறியது என்ன?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது நான் செய்த தவறுகளை திருத்தி கொள்கிறேன் என பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ரவீனா எலிமினேஷனுக்கு பின் தனது முதல் பதிவில் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் கடந்த ஞாயிறு அன்று ரவீனா மற்றும் நிக்சன் ஆகிய இருவரும் எலிமினேட் செய்யப்பட்டனர். இந்த நிலையில் நிக்சன் ஒரு பக்கம் ஜோவிகா, விக்ரம் சரவணனுடன் இணைந்த புகைப்படத்தை பதிவு செய்த நிலையில் ரவீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிக் பாஸ் வீட்டில் கடந்த 91 நாட்களில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து பதிவு செய்துள்ளார்.
அதில், ‘நான் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது எனக்கு மக்கள் கொடுத்த அன்பிற்கும் ஆதரவுக்கும் என் மனமார்ந்த நன்றி. 91 நாட்கள் என்னால் முடிந்த வரை உங்கள் அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தினேன் என்று நம்புகிறேன். இந்த நிகழ்ச்சியின் அனுபவம் குறித்து ஒரே வார்த்தைகள் சொல்ல முடியாது. ஆனால் சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் எனது வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம் மற்றும் அனுபவமாக கருதுகிறேன்.
கமல் சார், விஜய் டிவி, ஆகியவர்கள் எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்ததற்கு நன்றி. எனது சொந்த வீடு போல பிக்பாஸ் வீட்டில் இருந்த போது உணர வைத்த எனது சக போட்டியாளர்களுக்கு நன்றி. இந்த நிகழ்ச்சியை நான் ஒரு பாடமாக எடுத்துக் கொள்கிறேன். அதே நேரத்தில் நான் செய்த சில தவறுகளை இனிமேல் திருத்திக் கொள்கிறேன். உங்களுடைய விமர்சனங்களையும் நான் மனதார ஏற்றுக்கொள்கிறேன். பிக் பாஸ் என்றுமே எனது மனதிற்கு நெருக்கமான ஒரு நிகழ்ச்சியாகும்’ என்று பதிவு செய்து உள்ளார் . இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments