இது முழுக்க முழுக்க வதந்தி, யாரும் நம்ப வேண்டாம்: 'இராவண கோட்டம்' படக்குழு அறிக்கை..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவான ‘இராவண கோட்டம்’ என்ற திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது,. இந்த நிலையில் இந்த படம் குறித்து சில வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பர்வி வரும் நிலையில் படக்குழுவினர் விளக்கம் ஒன்றை அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:
மண் சார்ந்த கதையை, மனிதத்தை, அன்பை விதைக்கும் படைப்பாக மட்டுமே எங்கள் "இராவண கோட்டம்" திரைப்படத்தை உருவாக்கியுள்ளோம். KRG Group of Companies நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் சாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் முழுக்க முழுக்க கற்பனையாக உருவாக்கப்பட்ட கதையாகும். எந்த வகையிலும் இனம், மொழி சார்ந்து யாரையும் காயப்படுத்தும் வகையில் எந்த ஒரு காட்சியும் படத்தில் உருவாக்கப்படவில்லை.
நேற்று நடந்த பத்திரிகையாளர் முன் வெளியீட்டு காட்சி மற்றும் பிரத்யேக காட்சியில் படம் பார்த்த பத்திரிகை நண்பர்கள் மற்றும் பொதுமக்கள், நண்பர்கள் இதை உறுதிப்படுத்தியுள்ளனர் மற்றும் மக்களிடையேயான ஒற்றுமையும் அன்பையும் போற்றும் இப்படத்தின் கருவை அனைவரும் பாராட்டியுள்ளனர்.
படத்தில் ஒரு சில இனத்தினரை காயப்படுத்தியுள்ளதாக எழுந்துள்ள வதந்திகள் முற்றிலும் பொய்யானது. இப்படம் எவரையும் எந்த வகையிலும் காயப்படுத்தவில்லை. தயவுகூர்ந்து வதந்திகளை நம்பி படத்தின் மீது தடை கோருவதும் படத்தை தடுக்கும் நோக்கிலான செயல்பாடுகளிலும் ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
We have brought this movie to theatres after a lot of struggles & hardships !
— Shanthnu இராவண கோட்டம் (@imKBRshanthnu) May 11, 2023
We have not degraded any particular community 🙏🏻 Please do not believe in rumours - Raavana Kottam team @VikramSugumara3 #KannanRavi @DoneChannel1 @teamaimpr @CtcMediaboy pic.twitter.com/J5gP5dZ1aX
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com