இது முழுக்க முழுக்க வதந்தி, யாரும் நம்ப வேண்டாம்: 'இராவண கோட்டம்' படக்குழு அறிக்கை..!

  • IndiaGlitz, [Friday,May 12 2023]

சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவான ‘இராவண கோட்டம்’ என்ற திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது,. இந்த நிலையில் இந்த படம் குறித்து சில வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பர்வி வரும் நிலையில் படக்குழுவினர் விளக்கம் ஒன்றை அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:

மண் சார்ந்த கதையை, மனிதத்தை, அன்பை விதைக்கும் படைப்பாக மட்டுமே எங்கள் இராவண கோட்டம் திரைப்படத்தை உருவாக்கியுள்ளோம். KRG Group of Companies நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் சாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் முழுக்க முழுக்க கற்பனையாக உருவாக்கப்பட்ட கதையாகும். எந்த வகையிலும் இனம், மொழி சார்ந்து யாரையும் காயப்படுத்தும் வகையில் எந்த ஒரு காட்சியும் படத்தில் உருவாக்கப்படவில்லை.

நேற்று நடந்த பத்திரிகையாளர் முன் வெளியீட்டு காட்சி மற்றும் பிரத்யேக காட்சியில் படம் பார்த்த பத்திரிகை நண்பர்கள் மற்றும் பொதுமக்கள், நண்பர்கள் இதை உறுதிப்படுத்தியுள்ளனர் மற்றும் மக்களிடையேயான ஒற்றுமையும் அன்பையும் போற்றும் இப்படத்தின் கருவை அனைவரும் பாராட்டியுள்ளனர்.

படத்தில் ஒரு சில இனத்தினரை காயப்படுத்தியுள்ளதாக எழுந்துள்ள வதந்திகள் முற்றிலும் பொய்யானது. இப்படம் எவரையும் எந்த வகையிலும் காயப்படுத்தவில்லை. தயவுகூர்ந்து வதந்திகளை நம்பி படத்தின் மீது தடை கோருவதும் படத்தை தடுக்கும் நோக்கிலான செயல்பாடுகளிலும் ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News

'FastX' படத்தில் பால்வாக்கர் மகள்.. இன்ஸ்டாவில் எமோஷனல் பதிவு..!

'ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்' படத்தின் 10வது பாகம் 'FastX' வரும் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நான் டேட்டிங் செய்த அனைவருமே நல்லவர்கள்: பிரியங்கா சோப்ராவின் காதலர்கள் லிஸ்ட்..!

பிரபல நடிகை ஒருவருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் தற்போது திருமணத்திற்கு முந்தைய தனது காதல் குறித்து மலரும் நினைவுகளை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அரசியலுக்கு வருவது உறுதி: ரஜினி பட வில்லன் நடிகர் அறிவிப்பு..!

திரை உலகை சேர்ந்த பல நடிகர்கள், நடிகைகள் ஏற்கனவே அரசியலில் இருந்து வரும் நிலையில் விஜய் உள்பட இன்னும் பல பிரபலங்கள் அரசியலுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில்

மறைந்த பிரபல தமிழ் நடிகரின் மனைவிக்கு 6 மாதம் சிறை.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

ஆர்ஜே பாலாஜியின் 'எல்கேஜி' உள்பட ஒரு சில படங்களில் நடித்த பிரபல நடிகர் ரித்தீஷ் மனைவிக்கு ஆறு மாதம் சிறை தண்டனை என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அருள்நிதியின் 'கழுவேத்தி மூர்க்கன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு.. வேற லெவல் போஸ்டர்..!

அருள்நிதி நடிப்பில் உருவாகி வந்த  'கழுவேத்தி மூர்க்கன்' என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து இறுதி கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.