ஷாந்தனுவின் 'இராவண கோட்டம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் ’மதயானை கூட்டம்’ இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவான ‘இராவண கோட்டம்’ என்ற திரைப்படம் ரிலீசுக்கு முன் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த திரைக்கதை ஆசிரியர் கே. பாக்யராஜ் மகன் சாந்தனு பாக்யராஜ் பல ஆண்டுகளாக திரையுலகில் இருந்தாலும் அவருக்கு திருப்புமுனையை கொடுக்கும் படம் இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில் ’மதயானை கூட்டம்’ என்ற வெற்றி படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் உருவாகி வந்த ‘இராவண கோட்டம்’ திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் துபாயில் நடந்தது என்பதும் தமிழ் திரை உலக பிரபலங்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படம் மே 12ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஷாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ள நிலையில் ரசிகர்கள் இந்த படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சாந்தனு , ’கயல்’ ஆனந்தி, பிரபு உள்பட பலர் நடிப்பில் உருவான இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். துபாய் தொழிலதிபர் கண்ணன் ரவி இந்த படத்தை தயாரித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எங்களது சிறிய முயற்சி …
— Shanthnu இராவண கோட்டம் (@imKBRshanthnu) April 22, 2023
வருகிறோம்.. #May12 முதல் உலகமெங்கும் #இராவணகோட்டம்
உங்கள் ஆதரவுடன்
Please support us 🤎🙏🏻#Shanthnu @VikramSugumara3 #KannanRavi @justin_tunes @anandhiactress #RaavanaKottamfromMay12th @DoneChannel1 @teamaimpr pic.twitter.com/CbJYBV8P3K
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments