'தலைவர் 171' படத்தில் ரத்னகுமார் இல்லை.. ஏன்? லோகேஷ் கனகராஜ் விளக்கம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’தலைவர் 171’ திரைப்படத்தில் ரத்னகுமார் பணி புரியவில்லை என தகவல் வெளியாகி உள்ளன.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ’மாஸ்டர்’ ’விக்ரம்’ மற்றும் ’லியோ’ ஆகிய மூன்று படங்களிலும் ரத்னகுமார் பணிபுரிந்தார் என்பதும் லோகேஷ் கனகராஜின் திரைக்கதை வசனத்தில் அவர் உதவியாக இருந்தார் என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள அடுத்த திரைப்படமான சூப்பர் ஸ்டார் ரஜினியின் ’தலைவர் 171’ திரைப்படத்தில் ரத்னகுமார் பணி புரியவில்லை என சமீபத்தில் அளித்த பேட்டியில் லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார்.
ரத்னகுமார் தனியாக படம் இயக்கப் போவதை அடுத்து அவர் இந்த படத்தில் பணி புரியவில்லை என்றும் அவருக்கு பதிலாக வேற ஒரு எழுத்தாளரை தேர்வு செய்ய உள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார். எனவே ’தலைவர் 171’ திரைப்படத்தில் ரத்னகுமார் பணிபுரியவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த ’லியோ’ வெற்றி விழாவில் பேசிய ரத்னகுமார் கழுகு-காக்கா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments