லோகேஷை விட்டு வேறு இயக்குனரிடம் உதவியாளராக சேர்ந்த ரத்னகுமார் .. என்ன படம் தெரியுமா?

  • IndiaGlitz, [Tuesday,January 30 2024]

இயக்குனர் ரத்னகுமார், லோகேஷ் கனகராஜ் இயக்கிய சில படங்களில் ஸ்கிரிப்ட் எழுதுவதில் உதவியாக இருந்த நிலையில் தற்போது லோகேஷ் இயக்கும் அடுத்த படமாக ’தலைவர் 171’ படத்தில் அவர் பணி புரியவில்லை என தெரிகிறது

விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ’லியோ’ திரைப்படத்தில் திரைக்கதைக்கு உதவியாக இருந்த ரத்னகுமார், அந்த படத்தின் வெற்றி விழாவில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து அவர் ’தலைவர் 171’ படத்தில் பணிபுரிய மாட்டார் என்று கூறப்பட்டது.

அதுமட்டுமின்றி லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ஒரு படத்தை ரத்னகுமார் இயக்க இருப்பதாகவும் அதனால் தான் அவர் ’தலைவர் 171’ படத்தில் பணி புரியவில்லை என்றும் கூறப்பட்டது. மேலும் 171’ கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சமூக வலைதளத்தில் இருந்து சில மாதங்கள் விலகி இருப்பதாக தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல்படி, கார்த்தி நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’சர்தார் 2’ படத்தில் திரைக்கதை உதவியாளராக ரத்னகுமார் பணிபுரிய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

‘மாஸ்டர்’ ’விக்ரம்’ ’லியோ’ என தொடர்ச்சியாக மூன்று லோகேஷ் கனகராஜ் படங்களுக்கு பணிபுரிந்த ரத்னகுமார் தற்போது பிஎஸ் மித்ரன் இயக்கும் படத்திற்கு மாறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.