close
Choose your channels

'கூலி' படத்தில் வாய்ப்பு கிடைக்காத ரத்னகுமாருக்கு ஜாக்பாட்.. இன்று முதல் செம்ம பிஸி..!

Friday, July 12, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லோகேஷ் கனகராஜ் இயக்கிய சில திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதும் பணியில் உதவியாக இருந்த ரத்னகுமார் ’கூலி’ படத்தில் பணிபுரிய வாய்ப்பு கிடைக்காத நிலையில் தற்போது அவருக்கு ஒரு ஜாக்பாட் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

விஜய் நடித்த ’லியோ’ திரைப்படத்தின் வெற்றி விழாவில் ரத்னகுமார், ரஜினி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்பட்டது. இதனால் ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ’கூலி’ படத்தில் அவருக்கு பணிபுரிய வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதனை அடுத்து அவர் தனியாக ஒரு படத்தை இயக்கப் போகிறார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ’சர்தார் 2’ படத்தில் திரைக்கதை எழுதும் குழுவில் இணைந்துள்ளார். இதனை அடுத்து அவர் பிசியாகி உள்ளதாகவும் இந்த படத்தின் திரைக்கதையை விறுவிறுப்பாக கொண்டு செல்ல அவர் பணிபுரிய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

’சர்தார்’ திரைப்படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது பாகத்தையும் வெற்றிப்படமாக்க குழுவினர் தீவிரமாக பணி செய்து கொண்டிருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 15ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாகவும் விரைவில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment