அசாம் மாநிலத்தில் சூப்பர்ஹிட் வெற்றி பெற்ற 'தெறி'
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளிவந்த வெற்றிப்படம் ‘தெறி’. இந்த படத்தின் கதை தனது மகளின் பாதுகாப்பிற்காக முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவர் தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருப்பதும் அதன் பின்னர் வில்லன், ஹீரோவை கண்டுபிடித்ததும் என்ன ஆகும் என்பது தான் என்பது தெரிந்ததே
இந்த நிலையில் ‘தெறி’ படத்தை தழுவி அசாம் மொழியில் ‘ரத்னாகர்’ என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. தெறி படத்தில் உள்ள ஹீரோ போலீஸ், இந்த படத்தின் ஹீரோ கேங்க்ஸ்டர். அது ஒன்றுதான் வித்தியாசம். மற்றபடி முழுக்க முழுக்க ‘தெறி’ படத்தை தழுவிதான் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படம் அசாமில் மட்டுமின்றி வடகிழக்கு மாநிலங்கள் அனைத்திலும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது
இந்த படத்தின் வெற்றி குறித்து தயாரிப்பாளர் சித்தார் கோயங்கா கூறியபோது, ரத்னாகர்"படம் இதுவரை ரூ.9 கோடியே 23 லட்சம் வசூலித்துள்ளது. அசாமில் 9 கோடி ரூபாய் என்றால் ஒரு இந்தித் திரைப்படம் இந்தியாவில் 900 கோடி ரூபாய் வியாபாரம் செய்வதற்கு ஈடாகும்
கடந்த செப்டம்பர் மாதம் வெளியான ’கஞ்சன்ஜங்கா’ என்ற திரைப்படம் முதல் ஐந்து நாட்களில் ரூ.7 கோடியை வசூலித்ததே அசாமில் இதுவரை சாதனையாக இருந்தது. ’ரத்னாகர்’ அந்தச் சாதனையை முறியடித்துள்ளது. அடுத்தடுத்து வசூல் சாதனை படைக்கும் படங்களால் அசாமியத் திரைப்பட வியாபாரத்தில் இருப்பவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். வழக்கமாக இந்திப் படங்களுக்காக அசாமியப் படங்கள் வழிவிடும். இம்முறை அசாமிய படங்கள் முக்கியத்துவம் பெற்று இந்திப் படங்களை ஒதுக்கியுள்ளது என்று பெருமையுடன் தயாரிப்பாளர் சித்தார் கோயங்கா கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments