'மாஸ்டர்' ஆடியோ விழாவில் மாஸ் ஸ்பீச்? பிரபல இயக்குனர் டுவீட்

  • IndiaGlitz, [Thursday,February 06 2020]

தளபதி விஜய் நடித்த பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் இந்த படத்திற்கு ஃபைனான்ஸ் செய்த பைனான்சியர் வீடுகளில் பல கோடி ரூபாய் வருமான வரித்துறை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகியது. ஆனால் அதே நேரத்தில் விஜய் வீட்டில் கடந்த 18 மணி நேரங்களாக நடைபெற்ற வருமான வரி சோதனையில் ஒரு ரூபாய் கூட கணக்கில் வராத பணம் கைப்பற்றப்படவில்லை என தெரியவந்துள்ளது இதனை அடுத்து விஜய் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

இந்த நிலையில் பிரபல இயக்குனரும் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தில் பணிபுரிந்து வருபவருமான இயக்குனர் ரத்னகுமார் தனது டுவிட்டர் பக்கத்தில் ’மாஸ்டர் ஆடியோ விழாவை எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்’ என்று கூறியுள்ளார். இதிலிருந்து நேற்றும் இன்றும் நடைபெற்ற வருமான வரி சோதனை குறித்து மாஸ்டர் ஆடியோ விழாவில் விஜய்யின் மாஸ் ஸ்பீச் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் ரத்னகுமாரின் இந்த டுவிட்டுக்கு விஜய் ரசிகர்கள் அதிரடி கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். ’தர்மம் தான் ஜெயிக்கும் நியாயம் தான் ஜெயிக்கும் ஆனால் லேட்டா ஜெயிக்கும்’ என்றும் ’தரமான சம்பவம் ஆடியோ விழாவில் இருக்கிறது’ என்றும் ’நாங்களும் அதற்குத்தான் எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்’ என்றும் பலர் கமெண்ட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.