close
Choose your channels

ரத்தன் டாடா தயாரித்த ஒரே திரைப்படம்.. ஹீரோ யார் தெரியுமா?

Thursday, October 10, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியாவின் முன்னணி தொழில் அதிபரான ரத்தன் டாடா நேற்று காலமான நிலையில், அவருக்கு பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, பல திரையுலக பிரபலங்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், ரத்தன் டாடா ஒரே ஒரு திரைப்படத்தை தயாரித்தார் என்பது பலருக்கும் ஆச்சரியமான தகவலாக உள்ளது.

உப்பு முதல் தங்கம் வரை, கிட்டத்தட்ட அனைத்து துறை தயாரிப்புகளிலும் ஈடுபட்டிருந்த ரத்தன் டாடா, திரைத்துறையில் மட்டும் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. ரத்தன் டாடாவின் தாத்தா ஜடின் குமார் என்பவர், ஒருமுறை விமானத்தில் செல்லும்போது, அவரது அருகில் அமிதாப் பச்சன் உட்கார்ந்து இருந்தார். ஆனால் தன் அருகில் உட்கார்ந்திருந்தவர் நடிகர் அமிதாப் பச்சன் என்பதே அவருக்கு தெரிந்திருக்கவில்லை என்பதிலிருந்து, அவருக்கு திரையுலகத்தில் சுத்தமாக நாட்டம் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

அதேபோல, ரத்தன் டாடா அவர்களும் திரை துறையில் ஆர்வம் காட்டாத நிலையில், ஜடின் குமார் என்பவருடன் இணைந்து, அமிதாப் பச்சன் நடித்த ’ஏட்பார்’ என்ற திரைப்படத்தை கடந்த 2004ஆம் ஆண்டு தயாரித்தார். இந்த படம் சுமார் ரூ.8.50 கோடி பட்ஜெட்டில் உருவான நிலையில், இந்த படத்தால் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும், அதன் பிறகு அவர் திரைப்பட தயாரிப்பு தொழிலில் ஈடுபடவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று ரத்தன் டாடா காலமான நிலையில், பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர் என்பதும், தமிழ் திரை உலகில் கமல்ஹாசன் உட்பட ஏராளமானோர் தங்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment