ஆசிரியர் ராஜகோபாலன் விவகாரம்; 'ராட்சசன்' கேரக்டரை ஒப்பிட்டு இயக்குனர் ராம்குமார் டுவிட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டு போஸ்கோ சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து நெட்டிசன் ஒருவர் ’ராட்சசன்’ படத்துடன் ஒப்பிட்டு டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார் என்பதும்,அந்த டுவிட்டிற்கு ’ராட்சசன்’ இயக்குனர் ராம்குமார் பதிலளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இது குறித்து நெட்டிசன் எழுப்பிய பதிவில், ‘இன்னிக்கு முழுக்க ஏதேதோ வேலைல இருந்தாலும் இந்த PSBB school விவகாரம், அந்த ராஜகோபலனின் கீழ்மையும்தான் ஓடிட்டே இருந்துச்சு. ராட்சசன் படம் வந்தப்ப, மாணவிகளின் பெற்றோர் எவ்வளவு பயப்படுவாங்க இதெல்லாம் தவறான படம்னு வாதம் செய்தேன். மிகக்கடுமையான தண்டனை என்பது முதல் தேவை அடுத்து, எப்படி, என்ன செய்தால் இவற்றை தடுக்கலாம் என்ற ஆய்வும் முன்னெடுப்பும் மிக அவசியம். குழந்தைகளுக்கு மறுக்கபட்ட இந்த சுதந்திரமும் கூட இந்த குற்றத்திற்கான இன்னொரு காரணம். முன்பே இந்த சிக்கல் வெளியே வந்திருப்பின் பல குழந்தைகள் காப்பாற்றபட்டிருப்பர்’ என்று தெரிவித்திருந்தார்.
நெட்டிசனின் இந்த பதிவுக்கு பதிலளித்த ’ராட்சசன்’ இயக்குனர் ராம்குமார், ‘ராட்சசன் இன்பராஜ் கதாபாத்திரம் சுயமாக உருவாக்கம் செய்யபடவில்லை. பல உண்மை சம்பவங்களின் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டது. அந்த சம்பவங்களின் குற்றவாளிகள் இன்பராஜை விட மோசமானவர்களாக இருந்தார்கள்! என்று தெரிவித்துள்ளார்.
ராட்சசன் இன்பராஜ் கதாபாத்திரம் சுயமாக உருவாக்கம் செய்யபடவில்லை. பல உண்மை சம்பவங்களின் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டது. அந்த சம்பவங்களின் குற்றவாளிகள் இன்பராஜை விட மோசமானவர்களாக இருந்தார்கள்!#PSBB https://t.co/cOSvUGWV9Y
— Ramkumar_official (@dir_ramkumar) May 24, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments