தனுஷால் இந்தி பட வாய்ப்பை மறுத்த 'ராட்சசன்' இயக்குனர்!

  • IndiaGlitz, [Monday,August 24 2020]

விஷ்ணு விஷால், அமலாபால் நடிப்பில் ராம்குமார் இயக்கிய ’ராட்சசன்’ திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்ற இந்த படம் தெலுங்கிலும் ரீமேக் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தற்போது இந்தியிலும் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’ராட்சசன்’ படத்தின் இந்தி ரீமெக்கை இயக்குவதற்கு இயக்குனர் ராம்குமாரிடம் பாலிவுட்டின் முன்னணி நிறுவனம் ஒன்று பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் இயக்குனர் ராம்குமாரோ, ‘தனுஷின் அடுத்தப் படத்தை இயக்க இருப்பதால் அந்த படத்தை தன்னால் ஏற்க முடியாது என்று மறுத்து விட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் ’ராட்சசன்’ படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து இயக்கிய இயக்குனர் ரமேஷ் வர்மா தற்போது இந்தியிலும் ரீமேக் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்து ஆகிவிட்டதாகவும், விரைவில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

ராட்சசன் திரைப்படம் ஹிந்தியிலும் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் தனுஷ் படத்தை இயக்க வேண்டும் என்பதால் பாலிவுட் பட வாய்ப்பையும் இயக்குனர் ராம்குமாரும் மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஒரே நேரத்தில் 6 இடங்களில் கடல் நீரை உறிஞ்சும் மேகம்!!! ஹாலிவுட்டையும் மிஞ்சும் அற்புதக்காட்சி!!!

ஒரே நேரத்தில் அருகருகே 6 இடங்களில் மேகம் கடல் நீரை நேரடியாக உறிஞ்சுவதைப் போன்ற ஒரு புகைப்படத்தை தினத்தந்தி வெளியிட்டு இருக்கிறது.

மலை மீது ஒரு கிமீ பயணம் செய்யும் மாணவ மாணவிகள்! ஆன்லைன் வகுப்பின் பரிதாபங்கள்!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன என்பது தெரிந்ததே. இந்த ஆன்லைன் வகுப்புகளை கம்ப்யூட்டர், லேப்டாப், செல்போன் இருப்பவர்கள்

'சூனா பானா'வுக்கு இபாஸ் கொடுத்த மதுரை மாவட்ட நிர்வாகம்: பரபரப்பு தகவல்

சூனா பானா என்றாலே உடனே அனைவருக்கும் ஞாபகம் வருவது வடிவேலு காமெடி கேரக்டர் தான். இந்த பஞ்சாயத்த கலைக்க என்ன பாடு பட்டேன்,  போ போ போ... என சூனா பானா கேரக்டரில் நடித்த வடிவேலுவின் நடிப்பே தனி

கொரோனாவில் இருந்து மீண்டதும், மீண்டும் பணியை தொடங்கிய அமிதாப்!

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் அவருடைய மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் பேத்தி ஆராதித்யா ஆகிய நால்வருக்கும்

கொரோனா வார்டில் கைவிலங்குடன் மது அருந்தும் நபர்!!! வைரலாகும் புகைப்படம்!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளி ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி இருக்கிறது. இந்நிலையில் தன்பாத்தில் உள்ள அரசு