ஊழியருக்காக உருகும் பணக்கார முதலாளி… ரத்தன் டாடா பற்றிய நெகிழ்ச்சி சம்பவம்!!!
- IndiaGlitz, [Tuesday,January 05 2021]
இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவனமான டாடா குழுமத்தின் செயல் அதிகாரி ரத்தன் டாடா. இந்நிறுவனம் உலகின் 83 நாடுகளில் கிளைப்பரப்பி இருப்பதோடு மேலும் மருத்துவம், தகவல் தொடர்பு, மின்சாரம் போன்ற பல்வேறு தொழில்களில் ஏராளமான பங்குகளை சொந்தமாக வைத்திருக்கிறது. இப்படி ஒரு நிறுவனத்துக்கு சொந்தக்காரராக இருந்து வரும் ரத்தன் டாடா கடந்த சில தினங்களுக்கு மும்பையில் இருந்து பூனேவிற்கு பயணமாகிறார்.
பூனேவில் உள்ள ஒரு சாதாரண அப்பார்ட்மெண்டில் தனது முன்னாள் ஊழியர் ஒருவரின் உடல் நலம் குறித்து மிகவும் அக்கறையோடு விசாரிக்கிறார். அந்நேரத்தில் இவரது பாதுகாப்புக்கு என்று யாரும் இல்லை. அதோடு ஊடக வெளிச்சமும் இல்லை. இப்படித்தான் ரத்தன் டாட்டா கொரோனா நேரத்தில் மட்டும் பாதிக்கப்பட்ட தனது 80 க்கும் மேற்பட்ட ஊழியர்களை நேரில் சந்தித்து சந்தித்து இருக்கிறார்.
மேலும் அந்நிறுவனத்தின் பணியாற்றும் பெரும்பாலான ஊழியர்களின் கடன் சுமையை இவர் இறக்கி வைத்து இருக்கிறார். அதோடு அவரது குழந்தைகளின் கல்விக்கும் இவர் தானாக சென்று உதவி இருக்கிறார். மருத்துவச் செலவுக்கு அந்நிறுவனம் எப்போதுமே உதவிக்கரம் நீட்டுகிறது. 83 வயதான ரத்தன் டாட்டாவின் இத்தகைய இரக்க குணத்தைப் பார்த்து அவரது ஊழியர்களே மலைத்து போகின்றனர். இதனால்தான் டாடா குழுமம் மென்மேலும் வளர்ச்சி அடைவதாகச் சிலர் கருத்தும் கூறியுள்ளனர். கொரோனா நிவாரணப்பணிக்காக இவர் கொடுத்த மிகப் பெரிய தொகையும் இந்திய அளவில் பாராட்டை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.