18 வயது இளைஞனின் நிறுவனத்தில் 50% முதலீடு செய்த ரத்தன் டாட்டா
- IndiaGlitz, [Thursday,May 07 2020]
18 வயது இளைஞர் ஒருவர் ஆரம்பித்த பார்மா நிறுவனத்தில் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாட்டா தனது சொந்த பணத்தை முதலீடு செய்துள்ளார்
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அர்ஜுன் தேஷ்பந்தே என்ற மும்பையைச் சேர்ந்த 18 வயது இளைஞர் பார்மா பிசினஸ் ஒன்றை தொடங்கினார். இந்த நிறுவனத்தில் இவர் தயாரிக்கும் ஜெனரிக் மருந்துகள் மொத்த விற்பனை கடைகளுக்கு விற்பனை செய்யாமல் நேரடியாக சில்லரை விற்பனை கடைகளுக்கு விற்பனை செய்தார். மும்பை, புனே, பெங்களூரு ஆகிய நகரங்களில் உள்ள சில்லரை கடைகளுக்கு நேரடியாக இந்நிறுவனத்தின் மருந்துகள் 16 முதல் 20 சதவீதம் மட்டுமே லாபம் வைத்து விற்பனை செய்யப்பட்டது. இதனால் 10 முதல் 20% லாபம் பார்க்கும் மொத்த வியாபாரிகளின் சதவிகித குறைந்ததால் சில்லரை கடைக்காரர்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த தொழில் திறமையை பார்த்து ஆச்சரியப்பட்ட பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா இந்நிறுவனத்தில் 50 சதவீதம் முதலீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த முதலீடு டாடா குழுமத்தில் இருந்து முதலீடு செய்யவில்லை என்பதும் டாடா தனது சொந்தப் பணத்தில் பர்சனலாக முதலீடு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
மேலும் இன்னும் ஒருசில ஆண்டுகளில் தமிழ்நாடு, ஆந்திரா, குஜராத் உள்பட பல மாநிலங்களில் இந்நிறுவனத்தின் கிளைகள் தொடங்கவும் அர்ஜூன் தேஷ்பந்தே திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.