ஆஸ்கார் நாயகனுக்கு கிடைத்த அமெரிக்க பதவி
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆஸ்கார் விருது பெற்று இந்தியாவிற்கு பெருமை தேடி தந்தவர்கள் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ரசூல் பூக்குட்டி என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் ஆஸ்கார் நாயகர்களில் ஒருவரான ரசூல் பூக்குட்டிக்கு அமெரிக்காவில் பெருமைக்குரிய பதவி ஒன்று கிடைத்துள்ளது.
MPSE என்ற Motion Pictures Sound Editos Guild Of America என்ற அமைப்பின் போர்டு உறுப்பினர்கள் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டனர். பத்து பேர் கொண்ட இந்த போர்டு உறுப்பினர்களில் ஒருவராக ரசூல் பூக்குட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த பதவியில் ரசூல் பூக்குட்டி அடுத்து வரும் இரண்டு வருடங்களுக்கு இருப்பார்.
இந்த தகவலை ரசூல் பூக்குட்டி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்தியா சினிமாவுலகிற்கே பெருமை சேர்க்கும் வகையில் தனக்கு இந்த பதவி கிடைத்துள்ளதாகவும், இதற்காக நன்றி தெரிவித்து கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Absolutely delighted to share with you all that I’m elected as one of the Board Members of #MPSE (Motion Pictures Sound Editos Guild Of America). Sharing my name and seat with some of most prolific names in the Induatry... huge honour for Indian Film Industry.First Of it’s kind! pic.twitter.com/9z33K5xHeP
— resul pookutty (@resulp) January 7, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com