கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட ஆஸ்கார் நாயகன்: வைரல் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆஸ்கார் விருதை வாங்கிய திரைப்பட கலைஞர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் ஆஸ்கார் விருது வாங்கியவர்களில் ஒருவரான ரசூல் பூக்குட்டி அவர்கள் மிகச்சிறந்த சவுண்ட் இன்ஜினியர் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் பல திரைப்படங்களில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டிருப்பதாக தன்னுடைய சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் கூடிய ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார். அந்த டுவிட்டில் அவர் கூறியிருப்பதாவது:
எங்கள் விஞ்ஞான சமூகத்தைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். கண்ணுக்கு தெரியாத சிறிய வைரஸை வெல்வதற்கு அவர்கள் தங்களுடைய தீவிர முயற்சியினால் எட்டே மாதங்களில் தடுப்பூசியை கொடுத்துள்ளார்கள். இந்த தடுப்பூசியை நான் இன்று எடுத்துக்கொண்டேன். எங்களுக்கு முன்னோக்கி செல்லும் பாதையைக் காட்டிய தடுப்பூசி கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள், தொழிலாளர்கள், அறிஞர்கள், மருத்துவர்கள் ஆகிய அனைவருக்கும் நான் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
ரசூல் பூக்குட்டியின் இந்த டுவிட்டும், புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
I’m proud of our Scientific community.They gave us a vaccine in flat 8months to beat the invisible tiny piece of Shiite. As I take this vaccine 2day,I thank the entire frontline workers, researchers, scholars, doctors who showed us a path forward.Long live Science,logic&reason. pic.twitter.com/8JUOuVzL0m
— resul pookutty (@resulp) March 13, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com