கடக ராசிக்கு ராசி பலன் ஆடி முதல் பங்குனி வரை -பிரபல வேத ஜோதிடர் பிரகாஷ் நரசிம்ஹன்

  • IndiaGlitz, [Wednesday,July 17 2024]

பிரபல ஜோதிடர் திரு. பிரகாஷ் நரசிம்ஹன் அவர்கள் யூடியூப் சேனல் ஆன்மீக கிளிக்ஸ்க்கு அளித்த பேட்டி ஒன்றில், வரும் ஆறு மாதங்களுக்கான (ஆடி முதல் பங்குனி வரை) 12 ராசிகளின் ராசி பலன்களை பற்றி விரிவாக கணித்துள்ளார். இதில், குறிப்பாக கடக ராசி நேயர்களுக்கு அடுத்த 6 மாதங்கள் மிகவும் சாதகமாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

திரு. நரசிம்ஹன் அவர்களின் படி, கடக ராசிக்கு தற்போது குரு பகவான் யோகம் இருப்பதால், இந்த கால கட்டத்தில் கடக ராசி நபர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள், தொழில் வளர்ச்சி, பண வரவு அதிகரிப்பு, வழக்குகளில் இருந்து விடுபடுதல் போன்ற நற்செய்திகள் காத்திருக்கின்றன. மேலும், சகோதர உறவுகள் மேம்படும், மரியாதை அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும் என்றும், வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த நல்ல பலன்களை பெற, ஆடி மாதம் முதல் பங்குனி வரை சுந்தர காண்டம் படித்து ஆஞ்சநேயரை வணங்கி வழிபட வேண்டும் என்று பரிகாரம் அளித்துள்ளார்.

திரு. நரசிம்ஹன் அவர்களின் இந்த 6 மாத ராசி பலன்களை முழுமையாக காண, AANMEGAGLITZ யூடியூப் சேனலில் வெளியாகியுள்ள வீடியோவை பார்க்கலாம்.