ரசிகர்களுக்கு திருப்பி தருகிறேன்: 'வாரிசு' இசை விழாவிற்கு பின் ராஷ்மிகாவின் டுவிட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ரசிகர்கள் தங்களுக்கு அளித்த அன்பை திருப்பி செலுத்த உள்ளதாக ‘வாரிசு’ படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த 24 ஆம் தேதி சென்னையில் விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது என்பதும், இதில் விஜய், ராஷ்மிகா உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் காட்டிய அன்பு குறித்து ராஷ்மிகா தனது டுவிட்டர் பக்கத்தில் சற்று முன் பதிவு செய்துள்ளார். அதில், ‘எங்களை சந்திக்க நீங்கள் வந்ததற்கு நன்றி. உங்கள் அன்பை நாங்கள் உணர்ந்து கொண்டோம். இதை திருப்பி செலுத்த ஒரே ஒரு வழிதான் இருக்கிறது, அதுதான் பாடல்கள். விரைவில் உங்களை ஆன்லைனில் சந்திக்கிறேன். உங்களிடம் வெகுநேரம் நேரம் செலவழிப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்று ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Thank you so much for coming out to meet us… We felt your love and we wanted to give it back to you in some form and the song was one of those forms…
— Rashmika Mandanna (@iamRashmika) December 26, 2022
Soon I want to atleast virtually meet all of you ?? Spending time with you all is THE best FEELING! ❤️ pic.twitter.com/4i9jMp8OTJ
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments