இந்த நபரை சந்திக்க விரும்புகிறேன், யாராவது ஹெல்ப் பண்ணுங்களேன்: ராஷ்மிகா மந்தனா 

கடந்த ஆண்டு வெளியான ’புஷ்பா’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் பாடல் ஒன்றுக்கு பள்ளி சிறுமி ஒருவர் செம டான்ஸ் ஆடி உள்ள நிலையில் அந்த சிறுமியை தான் பார்க்க விரும்புவதாக தனது சமூக வலைத்தளத்தில் ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு வெளியான அல்லு அர்ஜுன், ராஷ்மிகா நடிப்பில் உருவான ’புஷ்பா’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற ’சாமி’ என்ற பாடல் மிகப்பெரிய அளவில் வைரலானது என்பதும் தெரிந்ததே. இந்த பாட்டின் மெட்டுக்கு ஏற்ப ராஷ்மிகா செம நடனம் ஆடியதை ரசிகர்கள் இன்னும் ரசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்த பாடலுக்கு ஏற்கனவே பல திரையுலக பிரபலங்கள் மற்றும் நெட்டிசன்கள் டான்ஸ் ஆடிய வீடியோக்கள் ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இந்த பாடலுக்கு பள்ளி சிறுமி ஒருவர் சூப்பர் டான்ஸ் ஆடிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ள ராஷ்மிகா, இந்த க்யூட் சிறுமியை நான் நேரில் பார்க்க விரும்புகிறேன், யாராவது ஹெல்ப் பண்ணுங்கள் என்று கூறியுள்ளார். விரைவில் இந்த சிறுமியை ராஷ்மிகா மந்தனா நேரில் பார்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


More News

ஒரே நேரத்தில் 'இந்தியன் 2' - 'ஆர்சி 15': இயக்குனர் ஷங்கரின் வேற லெவல் பிளான்!

 பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் ஒரே நேரத்தில் 'இந்தியன் 2' மற்றும் 'ஆர்சி 15' ஆகிய இரண்டு படங்களையும் மாறி மாறி வரும் நிலையில் தற்போது வேற லெவலில் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகம் முழுவதும் புரமோஷன்: 'பொன்னியின் செல்வன்' படக்குழுவின் மெகா திட்டம்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' வரும் 30ஆம் தேதி தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது.

'ஜெயிலர்' படப்பிடிப்பில் எதிர்பாராமல் ரஜினி சந்தித்த பிரபலம்: யார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'ஜெயிலர்'. 

'பொன்னியின் செல்வன்' ரன்னிங் டைம் இவ்வளவா? வெளிநாட்டு சென்சாரில் தகவல்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உரிமையுள்ள உருவாகியுள்ள திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட்

விஜய்யுடன் செல்பி.. ராஷ்மிகா மந்தனா பகிர்ந்த 'வாரிசு' புகைப்படம்

தளபதி விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படத்தில் நாயகியாக நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யுடன் இருக்கும் செல்பி புகைப்படத்தை பதிவு செய்துள்ள