இந்த நபரை சந்திக்க விரும்புகிறேன், யாராவது ஹெல்ப் பண்ணுங்களேன்: ராஷ்மிகா மந்தனா
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த ஆண்டு வெளியான ’புஷ்பா’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் பாடல் ஒன்றுக்கு பள்ளி சிறுமி ஒருவர் செம டான்ஸ் ஆடி உள்ள நிலையில் அந்த சிறுமியை தான் பார்க்க விரும்புவதாக தனது சமூக வலைத்தளத்தில் ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு வெளியான அல்லு அர்ஜுன், ராஷ்மிகா நடிப்பில் உருவான ’புஷ்பா’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற ’சாமி’ என்ற பாடல் மிகப்பெரிய அளவில் வைரலானது என்பதும் தெரிந்ததே. இந்த பாட்டின் மெட்டுக்கு ஏற்ப ராஷ்மிகா செம நடனம் ஆடியதை ரசிகர்கள் இன்னும் ரசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்த பாடலுக்கு ஏற்கனவே பல திரையுலக பிரபலங்கள் மற்றும் நெட்டிசன்கள் டான்ஸ் ஆடிய வீடியோக்கள் ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இந்த பாடலுக்கு பள்ளி சிறுமி ஒருவர் சூப்பர் டான்ஸ் ஆடிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ள ராஷ்மிகா, இந்த க்யூட் சிறுமியை நான் நேரில் பார்க்க விரும்புகிறேன், யாராவது ஹெல்ப் பண்ணுங்கள் என்று கூறியுள்ளார். விரைவில் இந்த சிறுமியை ராஷ்மிகா மந்தனா நேரில் பார்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Maaaaadddddeeeeee myyyyy daaaaaay.. I want to meet this cutie..??
— Rashmika Mandanna (@iamRashmika) September 14, 2022
how can I? ?? https://t.co/RxJXWzPlsK
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com