'ரஞ்சிதமே' பாடலுக்கு செம்ம ஆட்டம் போட்ட சிறுவன்.. ராஷ்மிகா மந்தனா பகிர்ந்த க்யூட் வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’ரஞ்சிதமே’ என்ற பாடல் மிகப்பெரிய அளவில் உலகம் முழுவதும் வைரல் ஆனது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் இந்த பாடலுக்கு ஒரு சிறுவன் செம்ம ஆட்டம் ஆடும் வீடியோ இணையதளத்தில் வைரலாகும் நிலையில் இந்த வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த நடிகை ராஷ்மிகா மந்தனா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.
விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் ’வாரிசு’. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது என்பதும் , இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் என்பதும் தெரிந்ததே.
குறிப்பாக ’ரஞ்சிதமே’ என்ற பாடல் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் விஜய்யே இந்த பாடலை பாடியிருந்ததை அடுத்து இந்த பாடல் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் கவரப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த பாடலுக்கு சிறுவன் செம்மையாக நடனமாடிய வீடியோவை பகிர்ந்து உள்ளார். ’இந்த வீடியோவை நான் மிகவும் விரும்புகிறேன், இந்த பாடலை நீங்கள் அனைவரும் இன்னும் ரசிப்பது எனக்கு மிகவும் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது’ என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
I love this.. I love these videos man! ❤️ makes me so so happy to watch you all enjoy the songs and the danceeee.. 🥳🥰🥰 https://t.co/AkwcMrH4Ud
— Rashmika Mandanna (@iamRashmika) June 26, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments