விஜய்யுடன் செல்பி.. ராஷ்மிகா மந்தனா பகிர்ந்த 'வாரிசு' புகைப்படம்

தளபதி விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படத்தில் நாயகியாக நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யுடன் இருக்கும் செல்பி புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்தப் படம் மிகப் பெரிய அளவில் வைரலாகி வருகிறது

தளபதி விஜய் நடிப்பில் பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாரிசு’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் படப்பிடிப்பு முடியும் முன்பே இந்த படத்தின் வியாபாரம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் வாரிசு படத்தின் நாயகியான ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யுடன் எடுத்த செல்பி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை விஜய் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

விஜய், ராஷ்மிகா மந்தனா பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு உள்பட பலர் நடிக்கின்றனர். தமன் இசையில் கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவிண கே.எல் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகிறது.

More News

எனக்கும் குதிரை ஓட்ட தெரியும்: நடிகை ராதிகா ஆப்தேவின் ஜாலி புகைப்படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படம் உள்பட பல படங்களில் நடித்தவர் நடிகை ராதிகா ஆப்தே என்பதும் கேரக்டரை மனதில் பதியவைத்து இயல்பாக நடிக்கும் நடிகைகளில் அவரும் ஒருவர்

ராகவா லாரன்ஸை வேற லெவலில் மாற்றியவர் இவர்தான்: எதற்கு மாறினார் தெரியுமா?

 நடிகரும், நடன இயக்குனரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் திடீரென தனது உடல் எடையை அதிகரித்து கம்பீரமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் இந்த மாற்றத்திற்கு காரணம் இவர்தான்

'நானே வருவேன்' தெலுங்கு டைட்டில்: ரிலீஸ் செய்வது யார் தெரியுமா?

தனுஷ் நடிப்பில், செல்வராகவன் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், கலைப்புலி எஸ் தாணு அவர்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'நானே வருவேன்'.

வடிவேலு பிறந்த நாளில் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்!

நேற்று வைகைப்புயல் வடிவேலு தனது பிறந்த நாளை கொண்டாடினார் என்பதும் அவரது பிறந்த நாள் 'மாமன்னன்' படக்குழுவினர் மத்தியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது என்பதும் தெரிந்ததே.

நிறைய மனவலி மற்றும் தலைவலி: விஜய் டிவி பிரியங்காவின் வைரல் பதிவு!

விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தனக்கு நிறைய மனவலி மற்றும் தலைவலி என்று இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.