தளபதி விஜய் குறித்து ராஷ்மிகா மந்தனா கூறிய ஒரே ஒரு வார்த்தை!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய்க்கு தமிழகத்தில் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் கோடான கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதும் அவரது படம் வெளியாகும்போதும் அவரது பிறந்த நாளின் போதும் சமூக வலைதளம் ஸ்தம்பிக்கும் என்பதும் தெரிந்ததே. அதுமட்டுமின்றி தினமும் சமூக வலைதளங்களில் தளபதி விஜய் குறித்த செய்திகள் வெளியாகாத நாளே இல்லை என்றும் கூறலாம்
இந்த நிலையில் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகிலும் பலர் தளபதி விஜய்க்கு ரசிகர்களாக உள்ளனர் என்பதும் அவ்வப்போது அளிக்கும் பேட்டிகளில் விஜய் உடன் பணிபுரிந்த அனுபவம் மற்றும் விஜய் எளிமை, நடிப்பு, நடனத்திறமை ஆகியவை குறித்தும் பேசி வருவார்கள் என்பதும் தெரிந்தது
அந்த வகையில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் ராஷ்மிகா மந்தனா தற்போது ரசிகர்களுடன் சமூக வலைத்தளங்களில் உரையாடி வருகிறார். அப்போது ரசிகர் ஒருவர் ’தளபதி விஜய் குறித்து ஒரே ஒரு வார்த்தை கூறுங்கள்’ என்று கேள்விக்கு பதிலளித்த ராஷ்மிகா மந்தனா ’தளபதி’ என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார். இந்த பதில் தற்போது வைரலாகி வருகிறது
இந்த நிலையில் தளபதி விஜய் நடிக்கும் அடுத்த படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன
Thalapathy ??
— Rashmika Mandanna (@iamRashmika) January 5, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments