ராஷ்மிகா மந்தனாவுக்கு திருமணமா? அவரே அளித்த விளக்கம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தெலுங்கு நடிகருடன் நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு திருமணம் என வதந்திகள் பரவி வரும் நிலையில் தனது திருமணம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் ராஷ்மிகா மந்தனா விளக்கமளித்தார்.
திருமணம் குறித்து நான் இன்னும் யோசிக்கவே இல்லை என்றும், இப்பொழுது எனக்கு சின்ன வயது தான் என்றும், திருமண வயது இன்னும் வரவில்லை என்றும், திருமணம் பற்றிய எண்ணமே தனக்கு இல்லை என்றும் கூறினார்.
இருப்பினும் தனது திருமணம் குறித்து கருத்து கூறிய ராஷ்மிகா மந்தனா, ‘யார் என்னை பாதுகாப்பாக நிம்மதியாக வைத்திருக்க உதவி செய்வார்களோ? அவருடன் தான் எனக்கு திருமணம் என்றும் கூறியுள்ளார்.
மேலும் காதல் குறித்து அவர் விளக்கம் அளித்தபோது, ‘காதல் என்பது ஒரு தரப்பில் இருந்து வெளிவருவது கிடையாது என்றும், இருவருக்கும் அந்த உணர்வு வரவேண்டும் என்றும், காதல் என்பதை விரிவாக விவரித்து சொல்வது மிகவும் கடினம் என்றும், ஏனெனில் அது மனதில் இருந்து தோன்றும் ஒரு வகையான உணர்வு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து ராஷ்மிகா மந்தனாவுக்கு இப்போதைக்கு திருமணம் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments