இந்த க்யூட் குட்டிப்பாப்பா தான் இன்றைய பிரபல நடிகை: யாரென்று கண்டுபிடியுங்கள் பார்ப்போம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை எடுத்து திரையுலக பிரபலங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பிசியாக உள்ளனர். குறிப்பாக சில பிரபலங்கள் தங்களுடைய குழந்தை பருவ புகைப்படத்தை பதிவு செய்து ரசிகர்களுக்கு விருந்து அளிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா மந்தனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது குழந்தைப் பருவ புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
ராஷ்மிகா மந்தனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் ’கொரோனா எப்போது நம்மை விட்டுப் போகும் என்று காத்திருக்கிறேன்’ என்று கூறி தனது குழந்தைப் பருவ புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்து குழந்தை பருவத்திலேயே க்யூட்டாக இருக்கிறீர்கள் என்பது போன்ற கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.
சமீபத்தில் வெளியான கார்த்தியின் ’சுல்தான்’ திரைப்படத்தில் நடித்த ராஷ்மிகா மந்தனா தெலுங்கு திரையுலகில் நம்பர் ஒன் நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் அல்லு அர்ஜுனின் ’புஷ்பா’ உள்பட ஒரு சில தெலுங்கு திரைப்படங்களிலும் 2 இந்தி படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
Waiting for dearest Corona to leave like. ????♀️?? #ThrowbackThursday pic.twitter.com/XTOavaPtMZ
— Rashmika Mandanna (@iamRashmika) May 20, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com