அஜித்துக்கு போட்டியாக பெட்டியை தள்ளி கொண்டு செல்லும் ராஷ்மிகா மந்தனா.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடித்த ’விடாமுயற்சி’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் அந்த போஸ்டரில் அஜித் கையில் ஒரு பேக் வைத்துக் கொண்டு சாலையில் நடந்து செல்வது போன்ற காட்சி இடம் பெற்று இருந்தது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த நிலையில் ஒரு சிலர் இந்த போஸ்டரை வைத்து மீம்ஸ் பதிவு செய்தனர் என்பதும் குறிப்பாக ’பாரதி கண்ணம்மா’ சீரியலின் நாயகி கையில் பேக் வைத்துக் கொண்டு ஊர் ஊராக சுற்றுவதோடு இதனை ஒப்பிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அஜித் பேக் வைத்துக் கொண்டு சாலையில் நடந்து செல்லும் போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அதேபோல் ராஷ்மிகா மந்தனா நடிக்கும் அடுத்த படத்தின் போஸ்டரில் அவரும் ஒரு கையில் சூட்கேஸ் வைத்துக் கொண்டு காட்டு வழியே செல்லும் வகையில் வெளியாகி உள்ளது.
இந்த போஸ்டர் தனுஷ் நடித்து வரும் ’குபேரா’ படத்திற்கு ஆனது என்பதும் இந்த போஸ்டரில் ராஷ்மிகா மந்தனா கேரக்டர் குறித்த அறிவிப்பு ஜூலை 5ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷ், ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடிக்கும் இந்த படத்தில் நாகார்ஜுனா ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த ஆண்டு இறுதியில் இந்த படம் வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
Kubera 🔥🔥🔥❤️ @dhanushkraja @iamnagarjuna @sekharkammula @jimSarbh @Daliptahil @ThisIsDSP @SVCLLP @amigoscreation @AdityaMusic @KuberaTheMovie #Kubera pic.twitter.com/0lXAgdm22N
— Rashmika Mandanna (@iamRashmika) July 2, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments