ராஷ்மிகா மந்தனாவின் புதிய படம்.. டைட்டிலை அறிவித்த பிரபல தயாரிப்பு நிறுவனம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு இன்று காலை வெளியிடப் போவதாக பிரபல தயாரிப்பு நிறுவனம் ட்ரீம் வாரியர்ஸ் நேற்று தெரிவித்திருந்தது என்பதை பார்த்தோம். அந்த வகையில் சற்றுமுன் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
ராஷ்மிகா மந்தனா முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ’ரெயின்போ’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சாந்தரூபன் என்பவர் இயக்க இருக்கிறார். மேலும் பாஸ்கரன் ஒளிப்பதிவில், ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பில் உருவாகும் இந்த படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று இந்த படத்தின் பூஜை நடந்ததை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனாவுடன் நடிகர் தேவ மோகன் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, தமிழில் ராஷ்மிகா மந்தனா நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் முதன் முதலில் நடிக்க இருப்பதை அடுத்து இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
Today marks the start of a colourful journey. Join us as we bring the world of #Rainbow to life! 🌟 @iamRashmika @ActorDevMohan @bhaskaran_dop @justin_tunes @thamizh_editor #Banglan @sivadigitalart @Shantharuban87 @prabhu_sr#RainbowFilm #RainbowPooja pic.twitter.com/puANA99qWM
— DreamWarriorPictures (@DreamWarriorpic) April 3, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com