ராஷ்மிகா மந்தனாவின் புதிய படம்.. டைட்டிலை அறிவித்த பிரபல தயாரிப்பு நிறுவனம்..!

  • IndiaGlitz, [Monday,April 03 2023]

நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு இன்று காலை வெளியிடப் போவதாக பிரபல தயாரிப்பு நிறுவனம் ட்ரீம் வாரியர்ஸ் நேற்று தெரிவித்திருந்தது என்பதை பார்த்தோம். அந்த வகையில் சற்றுமுன் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ராஷ்மிகா மந்தனா முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ’ரெயின்போ’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சாந்தரூபன் என்பவர் இயக்க இருக்கிறார். மேலும் பாஸ்கரன் ஒளிப்பதிவில், ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பில் உருவாகும் இந்த படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று இந்த படத்தின் பூஜை நடந்ததை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனாவுடன் நடிகர் தேவ மோகன் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, தமிழில் ராஷ்மிகா மந்தனா நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் முதன் முதலில் நடிக்க இருப்பதை அடுத்து இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

இரட்டை குழந்தைகளுக்கு பெயர் வைத்த நயன் - விக்கி தம்பதி.. என்ன பெயர் தெரியுமா?

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தம்பதியினர் தங்களுடைய இரட்டைக் குழந்தைகளுக்கு பெயர் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பயிற்சியாளருடன் பாக்ஸிங்.. வேற லெவல் ஒர்க்-அவுட் வீடியோவை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்..!

நடிகை ஐஸ்வர்யா மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயிற்சியாளருடன் பாக்சிங் மற்றும் வேற லெவலில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு லைக் குவிந்து வருகிறது.

குழந்தைகளுடன் சூர்யா-ஜோதிகா குடும்பம்:  லேட்டஸ்ட் புகைப்படங்கள்..

சூர்யா மற்றும் ஜோதிகா குடும்பத்தின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. 

தமிழில் முதலிடம் 'லியோ', இரண்டாமிடம் 'சூர்யா 42': எதில் தெரியுமா?

தமிழில் அதிக விலைக்கு டிஜிட்டல் உரிமை விற்பனை செய்யப்பட்ட திரைப்படம் விஜய்யின் 'லியோ' திரைப்படம் முதல் இடத்திலும் சூர்யாவின் 'சூர்யா 42' திரைப்படம் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளதாக

கமல்ஹாசனை அடுத்து தைவானில் ஷங்கர்.. மாஸ் புகைப்படம் வைரல்..!

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'இந்தியன் 2'. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில்