107ஐ முடித்தது ஆட்டம் போட்ட ராஷ்மிகா மந்தனா: வைரல் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா மந்தனா ஜிம்மில் 107 கிலோ எடையை தூக்கி சாதனை செய்த பின் ஆட்டம் போட்ட வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவாகியுள்ளது.
தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்துக் கொண்டிருந்த ராஷ்மிகா மந்தனா, கார்த்தி நடித்த ‘சுல்தான்’ என்ற படத்தில் தமிழில் அறிமுகமாகி அதன்பிறகு தற்போது விஜய் நடித்து வரும் ’வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா 33 மில்லியன் ஃபாலோயர்கள் வைத்துள்ளார் என்பதும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அவ்வப்போது உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டு வரும் ராஷ்மிகா, சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 107 கிலோ எடையை பயிற்சியாளரின் உதவியுடன் தூக்கிய வீடியோவை பதிவு செய்துள்ளார். 107 கிலோ எடையை தூக்கி சாதனை செய்த பின்னர் அவர் ஆட்டம் போடும் காட்சியும் அந்த வீடியோவில் உள்ளன. இதனை அடுத்து அவரது ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு ராஷ்மிகாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Fire @iamRashmika ??#RashmikaStories #RashmikaMandanna pic.twitter.com/bz7kCZkBpR
— Rashmika Mandanna Kolkata Fan Club (@RMKFC) August 30, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments