இனியும் என் பொறுமையை சோதிக்காதீங்க.. ராஷ்மிகா மந்தனாவின் வருத்தமான பதிவு!
Send us your feedback to audioarticles@vaarta.com
இனியும் என் பொறுமையை சோதிக்காதீங்க என நடிகை ராஷ்மிகா மந்தனா மிகவும் வருத்தத்துடன் பதிவு செய்துள்ள இன்ஸ்டாகிராம் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் நடித்து வரும் ’வாரி’சு திரைப்படத்தில் நாயகியாக நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இந்த நிலையில் அவர் நடிகர் விஜய்தேவரகொண்டாவை காதலிப்பதாகவும் விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக வதந்திகள் எழுந்து வருகின்றன.
இது குறித்து ஏற்கனவே பலமுறை அவர் விளக்கம் அளித்த போதிலும் தொடர்ந்து இந்த வதந்தி பரவி வருகிறது. இந்த நிலையில் இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் வருத்தத்துடன் பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
கடந்த சில நாட்களாக ,இல்லை வாரங்களாக, இல்லை மாதங்களாக இல்லை, பல ஆண்டுகளாக என்னை தொந்தரவு செய்யும் விஷயங்கள் நடந்து கொண்டிருப்பதால் நான் பேச வேண்டிய நேரம் இது தான் என்று நினைக்கிறேன். இதை நான் பல வருடங்களுக்கு முன்பே செய்திருக்க வேண்டும்,. இப்போது தாமதமாக நான் இதை சொல்கிறேன்.
நான் என் சினிமா பயணத்தை தொடங்கியதில் இருந்தே நிறைய எதிர்ப்புகளை சந்தித்து வருகிறேன். நான் தேர்ந்தெடுத்துள்ள வாழ்க்கை மிகவும் சிக்கலானது என்று எனக்கு தெரியும். என்னை எல்லோருக்கும் பிடிக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. என் நடிப்பு உங்களுக்கு பிடிக்காமல் இருந்தால் என்னுடைய நடிப்பை நீங்கள் தாராளமாக விமர்சனம் செய்யலாம். என் நடிப்பின் மூலம் உங்களை மகிழ்ச்சிப்படுத்த விரும்பும் நான் உங்கள் விமர்சனத்தின் மீது அக்கறை காட்டுகிறேன். என்னால் முடிந்தவரை பெருமை கூட விஷயங்களை செய்ய முயற்சி செய்கிறேன்.
ஆனால் நான் சொல்லாத, செய்யாத ஒரு விஷயத்தை வைத்து நான் கேலி செய்யப்படும் போது படும்போது தான் மனம் உடைந்து விடுகிறேன். நான் சில பேட்டிகளில் பேசிய விஷயங்கள் எனக்கு எதிராக மாறி தவறாக வதந்திகள் பரவி வருகிறது. இது எனது சினிமா வாழ்க்கையை மட்டுமல்ல எனது தனிப்பட்ட உறவுகளையும் பாதிக்கும்.
ஒரு நல்ல விமர்சனம் ஒருவரை மேம்படுத்தும் என்பது எனக்கு தெரியும். ஆனால் சில விமர்சனங்கள் வேண்டுமென்றே வெறுப்புடன் மோசமாகவும் வருகிறது. இனியும் என்னுடைய பொறுமையை சோதிக்க வேண்டாம். உங்களின் அன்பும் ஆதரவும் வேண்டும் என்று நான் தைரியமாக சொல்லும் நிலையில் என்னை மோசமாக விமர்சிக்க வேண்டாம் என்றும் கேட்டு கொள்கிறேன்.
உங்களுக்காக நான் கண்டிப்பாக கடினமாக உழைப்பேன். உங்களை மகிழ்விப்பது தான் எனக்கு மகிழ்ச்சி தரும் விஷயம். எனவே அனைவரிடமும் அன்பாக இருங்கள்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவை அடுத்து அவருக்கு திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com