மார்போடு அணைப்பு.. உதட்டு முத்தம்.. கன்னத்தோடு உரசல்.. செல்லங்களுடன் கொஞ்சிய ராஷ்மிகா..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை ராஷ்மிகா மந்தனா தான் வளர்த்து வரும் செல்ல பிராணிகளுடன் கொஞ்சியது, உதட்டு முத்தம் கொடுத்தது மற்றும் கன்னத்தோடு கன்னம் உரசும் புகைப்படங்களை பதிவு செய்திருக்கும் நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா மந்தனா தற்போது பாலிவுட்டிலும் நடித்து வருகிறார் என்பதும் அவர் நடித்த பாலிவுட் திரைப்படம் ‘அனிமல்’ நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது பாலிவுட்டிலும் வாய்ப்புகளை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகாவுக்கு 43 மில்லியனுக்கு மேல் ஃபாலோயர்கள் இருக்கும் நிலையில் அவ்வப்போது அவர் தனது இன்ஸ்டாவில் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் சற்று முன் அவர் தான் வளர்த்து வரும் செல்ல பிராணிகளுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்
செல்ல பிராணிகளுக்கு உதட்டு முத்தம் கொடுப்பது, மார்போடு கட்டி அணைப்பது, கன்னத்தோடு கன்னம் உரசுவது ஆகிய புகைப்படங்களை பார்த்து ’செல்ல பிராணியாக நாம் பிறந்து இருக்கலாம்’ என்று ரசிகர்கள் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த பதிவில் அவர் ’எப்போது வேண்டுமானாலும் என்னை சுற்றி ஒரு செல்லப்பிராணி கூட்டம் இருக்கும், அவர்களுடன் நேரத்தை செலவிடுவது எனக்கு ஒரு மிகுந்த மகிழ்ச்சி, அவர்களுடன் செலவு செய்யும் நேரங்கள் மிகவும் அழகான தருணங்கள், அந்த அழகான தருணங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். ராஷ்மிகா மந்தனாவின் இந்த பதிவுக்கு 13 லட்சத்துக்கு அதிகமான லைக்ஸ் ஆயிரக்கணக்கான கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.
இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா தற்போது ’புஷ்பா 2’ ’ரெயின்போ’ ’தி கேர்ள் பிரண்ட்’ ஆகிய தெலுங்கு படங்களிலும் ’சாவா’ என்ற ஹிந்தி படத்திலும் ’குபேரா’ என்ற தமிழ் படத்திலும் என மொத்தம் ஐந்து படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com