தனுஷின் 'குபேரா' படத்தின் சூப்பர் அப்டேட் சொன்ன ராஷ்மிகா மந்தனா.. ரசிகர்கள் குஷி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடித்து வரும் ‘குபேரா’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் சூப்பர் அப்டேட்டை நாயகி ராஷ்மிகா மந்தனா தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ள நிலையில் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
தனுஷ், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் ‘குபேரா’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்தது.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்ததை அடுத்து புரமோஷன் பணிகளை தொடங்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதன்படி ‘குபேரா’ படத்தின் ஃபர்ஸ்ட் க்ளிம்ப்ஸ் வீடியோ நவம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை புகைப்படத்துடன் ராஷ்மிகா மந்தனா தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளதையடுத்து லைக், கமெண்ட் குவிந்து வருகிறது
தனுஷின் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நாகார்ஜுனா நடித்துள்ளார். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Kubera is comingggg! 🥰#SekharKammulasKubera ❤️🔥#KuberaGlimpse in 𝟓 𝐃ays ⏳@dhanushkraja KING @iamnagarjuna @sekharkammula @jimSarbh @ThisIsDSP @AsianSuniel @KuberaTheMovie #Kubera #KuberaGlimpseOnNov15th pic.twitter.com/tmLDS4puC6
— Rashmika Mandanna (@iamRashmika) November 10, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com